பக்கம்:வழுக்கு நிலம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 0 83 பார்வதி தன் அண்ணியின் கழுத்தை அலங்கரிக்கப் போகும் கழுத்தணியின் புதிய அமைப்பில் தன் மனத்தைப் பறி கொடுத்தாள். அந்த ஏடுகள் காட்டிய கோடுகள் புதுப்புது அணிவகைகளின் அழகைக் காட்டின. காஞ்சிபுரத்திலிருந்து புதுவகையான ஓரங்கள் அமைந்த பட்டுப் புடைவைகள் வீட்டில் துணிக்கடையொன்றையே அமைத்து விடக் கூடிய அளவில் வந்து குவிந்தன. "மாங்காய் வடிவம் போட்ட கழுத்தணி அழகுடையது" என்றாள் தாய். "இல்லை. உதயசூரியன்தான் இப்போது புதுமை என்று அண்ணி என்னிடம் சொன்னாள்." "சரி. அப்படியே செய்துவிட்டால் போகிறது." "என்ன! மாப்பிள்ளையிடமிருந்து ஏதாவது கடிதம் வந்ததா?" என்று கேட்டுக் கொண்டே பார்வதியின் தந்தை வீட்டிற்குள் நுழைந்தார். 'மாப்பிள்ளைதான் நம் வீட்டிலேயே உருவாகிக் கொண்டு இருக்கிறானே" என்றாள் வேடிக்கையாக, அவள் தாய். "இவனைப் பற்றிப் பேசவில்லை. நம் மருமகனைப் பற்றி. அவன் திருமணத்திற்கு வருவது பற்றி ஒன்றும் பதில் எழுத வில்லையா?” "அவனுக்கு மன வருத்தம் இருக்கும்போது எப்படி வருவான்?" 'அதற்கு....? அவன் வராவிட்டால் அவமானமாக இருக்காதா?” 'அதற்காகவாவது நீங்கள் ஏதாவது செய்ய வேண்டாமா ?” "இந்தச் செலவில் எப்படி அவனுக்கு ஏற்பாடு செய்வது? காடு கழனி விற்று இந்தக் கல்யாணத்திற்கு நகைகள் செய்ய வேண்டியிருக்கிறது. பெரிய இடமாயிற்றே! என்ன செய்வது? எல்லாம் அவனுக்கு நிதானமாகச் செய்தால் போச்சு.” "ஆமாம். செய்து வைப்பதற்கு என்ன வைத்திருக் கிறீர்கள் ? எல்லாவற்றையும் தான் விற்று ஒழித்து விட்டீர்களே..?” "பொறு. எல்லாம் நம் பையன் அந்த வீட்டு மருமகனாகி விட்டால் அந்த வீட்டுச் சொத்தே நம் பையனது தானே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/85&oldid=898292" இலிருந்து மீள்விக்கப்பட்டது