பக்கம்:வழுக்கு நிலம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ரா. சீனிவாசன் மற்றைய குவளைகளும் நாங்களும் இந்த இடத்தைவிட்டு வெளிக் கிளம்ப வேண்டியதுதான் என்று சொல்லுவதைப் போல இருந்தது அவையிருந்த சோகக் காட்சி அதைச் சிறிதும் பொருட்படுத்தாதவனைப் போல கண்ணாடி முன் நின்று தலையை வாரிக் கொண்டான். ஒப்பனை முடிந்ததும் அந்த இரண்டு குவளைகளையும் ஒரு பத்திரிகைப் பழந்தாளில் மடித்து அவற்றை ஒரு பையில் போட்டுக் கொண்டான். மேஜைமேல் இருந்த சிகரெட்டுப் பெட்டியை ஜேபியில் எடுத்து வைத்துக் கொண்டான். வெளியே போனதும் கதவை மூடிய சப்தம் கேட்டுத் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளச் சிவகாமி வெளியே வந்தாள். அவன் சிறிது நேரத்தில் தெருக்கோடியடைந்ததும் உள் தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு உள்ளறைக்கு வந்தாள். அங்கே ஒரு மூலையில் சுருண்டு உருண்டு கிடந்த கசங்கிய கடிதத்தை எடுத்தாள். ஏதாவது முக்கியமான ரசீதாக இருக்கும் என்று அதைப் பிரித்துப் பார்த்தாள். குப்பையில் கிடக்க வேண்டிய கூட்டும் பொருளா மேஜைமேல் வைக்க வேண்டிய முக்கியமான கடிதமா என்பதற்காகப் படித்தாள். சீக்கிரம் கலியாணம் நடக்கும். பார்வதி வந்து சேருவாள் என்ற நம்பிக்கை பிறந்தது. அதை எடுத்துப் பத்திரமாக மேஜைமேல் வைத்தாள். 12 வீட்டில் ஆரவாரமும் சுறுசுறுப்பும் கலந்து இருந்தன. திருமணத்திற்கு முன்னால் பொதுவாக ஏற்படும் புதுமையும் உற்சாகமும் பார்வதியின் வீட்டில் பொங்கி எழுந்தன. புத்தம் புதிய உடைகள் தைப்பதில் மாணிக்கம் உற்சாகம் காட்டினான். அவர்கள் சொல்லிய பொன் நகைகள், வைரம் இழைத்த கழுத்தணி இவற்றைச் செய்வதைப் பற்றிய ஆராய்ச்சிகள் எழுந்தன. அவற்றை விளக்கும் நகைப் புத்தகங்கள் நான்கைந்து வீட்டில் இடம் பெற்றன. இவற்றை யெல்லாம் செய்வதற்கு நிலங்கள் சில விற்கப்பட்டன. பணம் இருபதினாயிரம் ஒருவாறு சமாளிக்கப்பட்டது. பரந்துகிடந்த நிலங்கள் மின்னும் அணிவகைகள் செய்ய உதவப்பெற்றன. வாழ்வின் உயிர்நாடியாக இருந்த நிலங்கள் அழகுப் பொருள்களை ஆக்கப் பயன்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/84&oldid=898290" இலிருந்து மீள்விக்கப்பட்டது