பக்கம்:வழுக்கு நிலம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 81 வேறு ஆகிவிடும். கடனால் நாங்கள் முழுகிப் போகிற வரையில் காற்றுப் புகாத பாழடைந்த அறையிலே போட்டு வைப்பான். யாருக்கும் பயன்படாமல் நாங்கள் வாழ வேண்டிவரும். நாங்கள் பிறந்தபோது இந்த நோக்கத்தோடு பிறக்கவில்லை. வாழ்க்கையில் மற்றவர்களுக்குப் பயன்படவேண்டும் என்றுதான் பிறந்தோம். பெண்கள் காப்பி குடிக்கும்பொழுது அவர்கள் வாயிதழ்ச் சுவையை நாங்கள் நுகரும் பேறு பெற்றிருக்கிறோம். அதே போல ஆண்களின் இதழும் பட்டு அவர்கள் முத்தமும் பெற்றுப் பெருமை அடைகிறோம். சிலர் எங்களைச் சுவைக்காமல் துரக்கிக் குடிக்கின்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் சுவை பயப்பதில்லை. இதற்காகப் பிறந்திருக்கின்ற எங்களை, எங்கள் பெருமை யறியாத மார்வாடியின் கையில் ஒப்பிக்காதே. அவன் நாங்கள் உண்மையான வெள்ளிதானா என்று தட்டிப்பார்ப்பான். அதற்குமேல் எங்களைப் பற்றிக் கருதமாட்டான். எங்களைச் சிறையில் போடுவது போல் இருட்டறையில் போட்டு வைப்பான். நாங்கள் உங்கள் மணவாழ்வை அலங்கரிக்கக் கொடுக்கப்பட்ட பரிசுகள். நீயும் பார்வதியும் வாழும் இல்லற வாழ்வுக்கு நல்ல துணைவர்களாக இருக்க வந்தோம். உங்களுக்கு வாழ்க்கைப்பட அனுப்பப்பட்ட எங்களை நீ பிரிப்பது நியாயமா? உங்கள் வாழ்க்கை பிரிந்த வாழ்க்கை ஆகி விட்ட காரணத்தால் எங்களையும் உங்களைவிட்டுப் பிரிக்க நினைப்பது நியாயமா?" என்று கேட்பன போல அவை இவனுக்குத் தோற்றமளித்தன. "இவ்வளவு தூரம் எதிர்த்தா பேசுகிறீர்கள்; உங்களை விற்றுத் தொலைத்து விடுகிறேன்" என்று சொல்லுபவனைப் போல் அவற்றை உற்றுப் பார்த்தான். உயர்விலும் தாழ்விலும் மனங்கலங்காத சான்றோர்களைப் போல அவை சிரித்துக்கொண்டே இருந்தன. கொஞ்சங்கூடக் கருகாமல் வெள்ளை வெளேர் என்று காட்சியளிப்பதில் அவை பின்வாங்கவில்லை. அதற்காகச் சிறிதுகூட வருத்தப்பட்டன என்று சொல்ல முடியாமல் நின்ற நிலையிலேயே இருந்தன. இரண்டு வெள்ளிக் குவளைகளை எடுத்துத் தனியே பிரித்து வைத்தான். சிரித்துக் கொண்டிருந்த பற்களுள் இரண்டைப் பிடுங்கித் தனியே வைத்தது போல இருந்தது. அந்தக் குவளைகளுக்கு மத்தியில் இடைவெளி கொஞ்சம் விடப்பட்டிருந்தது. அந்த வரிசைக்கு அது அழகைக் கெடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/83&oldid=898288" இலிருந்து மீள்விக்கப்பட்டது