பக்கம்:வழுக்கு நிலம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ( ரா. சீனிவாசன் "மாணிக்கத்துக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகி விட்டது. நீயும் முன்னதாக வந்திருந்து திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைக்க வேண்டியது.” அதன் உண்மை வடிவம் மறையும்வரை அந்தக் கடிதத்தைக் கசக்கித் தூர எறிந்தான். அது கொஞ்ச தூரத்தில் சென்று விழுந்து அசையாமல் கிடந்தது. அதைப் பற்றியும் அவன் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அதோடு அழகான எழுத்தில் மற்றொரு கடிதம் அவன் கண்களுக்குப்பட்டது. முத்து முத்தாக எழுதியிருந்த எழுத்துக்கள் அவள் சில சமயங்களில் சிந்தும் கண்ணிர்த் துளிகளைக் கவனப்படுத்தின. "என் அண்ணன் திருமணத்தின் போது உங்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என நம்புகிறேன்." அதை அப்படியே அதே மேல் உறையில் போட்டு வைத்தான். அதைப் பத்திரப்படுத்த வேண்டுமென்ற எண்ணமோ, வீசி எறிய வேண்டுமென்ற வெறுப்போ அவனிடம் உண்டாகவில்லை. அது அவன் மேஜைமேல் இருந்த பல கடிதங்களோடு ஒன்றாகக் கலந்து கிடந்தது. திருமணத்துக்குப் போவதா வேண்டாமா என்ற சிந்தனையில் ஆழ்வதற்கு அவன் மனம் இடங்கொடுக்க வில்லை. அதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கவுமில்லை. அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அமைந்துவிட்டான். அதைவிடச் செலவுக்குப் பணம் எங்கே கேட்டால் கிடைக்கும் என்பதிலேயே அவன் மனம் சென்றது. சாய்வு நாற்காலியில் சாய்ந்து வரிசையாக அடுக்கப் பட்டிருந்த சில வெள்ளிக் குவளைகளின் மீது நாட்டம் கொண்டான். பளிச்சென்று வெள்ளை வெளேர் என்று அவை காட்சியளித்தன. அவற்றிற்குப் பூசியிருந்த முலாம் சிறிது கூடக் கெடாமல் இருந்தது. திருமணத்திற்குக் கொடுக்கப்பட்ட பரிசுகள் சில என்பதை அறிவுறுத்துவன போல அவை இருந்தன. சில வரிசை என்ற பெயரால் வரிசையாக இருந்தன. அவை இவனைப் பார்த்துச் சிரித்து இவனிடம் பேசுவன போல் இருந்தன. “ஏன் இப்படிக் கஷ்டப்படுகிறாய்? செலவுக்குத்தானே பணம் வேண்டும். நாங்கள் இருக்கிறோம் உனக்கு உதவ. எங்களை மார்வாடிக் கடைக்கு மட்டும் கொண்டு போகாதே. அவன் உனக்கு அவ்வளவு அதிகமான பணம் கொடுக்கமாட்டான். கொடுக்கின்ற பணத்திற்கு வட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/82&oldid=898286" இலிருந்து மீள்விக்கப்பட்டது