பக்கம்:வழுக்கு நிலம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 79 "அதெல்லாம் நியாயம் இல்லை. அவர் பணம் கொடுக்காமல் இருப்பதற்காக உன் வாழ்வை நீ பாழாக்கிக் கொள்வதா?” "பாழாகிவிட்டது. பாழ்பட்ட வாழ்வு இனிச் சீர்பெற வேண்டுமானால் கட்டாயம் பணம் வேண்டும். பணம் மிகுதியாக இருந்தாலும் வாழ்வு பாழாகிவிடும்; இல்லையென்றாலும் வாழ்வு அழிந்துவிடும்." "உன்னைச் சித்தாந்தம் கேட்கவில்லை. சீரோடு வாழச் சொல்லுகிறேன். போன பணத்தைக் காப்பாற்றியிருந்தால் போதுமே. பிறர் சொத்தை நம்பி உள்ளதையும் ஒழித்து விட்டாய். படிப்புப் படித்ததற்கு அடையாளமா இது?" "ஆமாம். மாமனார் சொத்தை எதிர்பார்ப்பதுதான் மாணவர்கள் படிப்பு முடிந்ததும் உலகத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் முதல் பொருளாதாரப் பாடமாக இருக்கிறது. இதுதான் மொத்தமாகப் பணம் வருவதற்குச் சரியான வழி." "சரிதான். அப்படியானால் எனக்குத் திருமணம் ஆகும் பொழுது அப்பா எனக்கு என்ன கொடுத்தார்? நீ எனக்கு என்ன கொடுக்கப் போகிறாய்?" "என் கடனில் உனக்குப் பாதி தருகிறேன் அக்கா." சிவகாமிக்குச் சிரிப்பு வந்தது. அவனும் சிரித்துவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான். "சிகரெட்டுப் பிடித்ததும் கொஞ்சம் உற்சாகம் உண்டானது போல் தெரிந்தது. மீதியிருந்த சிகரெட்டுகளை மறுபடியும் ஒருமுறை எண்ணிக்கொண்டான். இன்னும் எத்தனை தடவைக்கு வரும் என்று மனத்திலேயே கணக்குப் போட்டுக் கொண்டான். பிறகு, அதைப் பத்திரமாக எடுத்து மேசைமேல் வைத்தான். அதற்குள் வெளியேயிருந்து ஒரு தபால் கடிதம் உள்ளே எட்டிப் பார்த்தது. இவனும் அதை ஆவலாக எதிர் நோக்கினான். இவன் பெயருக்கு என இட்டிருந்த முகவரி இவனையே பார்ப்பது போல் இருநத்து. இவன் விழிகளும் அதைச் சந்தித்தன. இவன் கைக்கு வந்ததும் அந்தக் கடிதம் இவனிடம் பேசத் தொடங்கியது. அது அவன் மாமனாரின் குரலாக இருந்தது. அவனுக்கு அதைக் கேட்க விருப்பமில்லை. இருந்தாலும் அவன் கண்கள் அவ்வெழுத்துக்களை உற்றுப் பார்த்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/81&oldid=898283" இலிருந்து மீள்விக்கப்பட்டது