பக்கம்:வழுக்கு நிலம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ( ரா. சீனிவாசன் "எல்லாவற்றையும் ஒழித்து விடு. நீ சம்பாதிப்பது சிகரெட்டுக்குக் கூட போதாது போல இருக்கிறதே!" "என்ன செய்வது. சிகரெட்டு அலவன்ஸ் என்று ஏதாவது கொடுத்தால்தானே!" பழம் பானையின் பக்கத்தில் வைத்திருந்த சில்லரைக் காசு சில எடுத்துக் கொடுத்தாள். பெருக்கிக் கொண்டிருந்த வேலைக்காரி துடைப்பத்தை ஒரமாக வைத்தாள். - "இந்தா, ஒரு பெட்டி 'பெர்க்ளி சிகரெட்டு வாங்கி வா” என்று அந்தச் சில்லரைக் காசில் சிலவற்றை எடுத்துக் கொடுத்தான். சிறிது நேரத்தில் சிகரெட்டுப் பெட்டி அவனிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது. அப்புறம்தான் அவனுக்கு உற்சாகம் வந்தது போன்று இருந்தது. "ஏதாவது கடிதம் வந்ததா?” "இன்னும் ஒன்றும் வரவில்லை. போய்ச் சேர்ந்ததும் கூடக் கடிதம் போடவில்லையே." "போய்ச் சேராமல் எங்கே போய் இருப்பார்கள். சேர வில்லை என்று இருந்தால் தானே கடிதம் போடவேண்டும்." "போகட்டும். போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறதே இன்னும் ஒரு தகவலும் எழுதவில்லையே. ஆடி மாதம் போனதும் போய் அழைத்து வந்துவிடு." "கிடக்கிறாள். நான் போய் அழைத்து வரமாட்டேன். இப்பொழுது ஒன்றும் அவசரமில்லை.” "அவள் அண்ணனுக்குப் பெண் பார்க்க அழைத்துப் போனார்கள். திருமணம் ஏற்பாடு ஆனதும் அனுப்பி விடுவார்கள். எதற்கும் நீ ஒரு கடிதம் போடு. எப்பொழுது அனுப்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்." "அக்கா! அவர்கள் அழைத்துப் போகவில்லை. நான் தான் அனுப்பிவைத்தேன். உண்மையைச் சொல்லுகிறேன். கலியாணத்துக்கு முன்னால் மகள்மீகு பத்தாயிரம் மதிப்புள்ள சொத்து எழுதி வைக்கிறேன் என்று சொன்னார். அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை. அந்தச் சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்பதை வற்புறுத்த அனுப்பி யிருக்கிறேன். பணம் இல்லையென்றால் அவளை நான் அழைத்து வரப் போவதில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/80&oldid=898282" இலிருந்து மீள்விக்கப்பட்டது