பக்கம்:வழுக்கு நிலம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 7 விட்டுவிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்தான். படித்ததையே திருப்பித் திருப்பி இரண்டாம் முறையும் படிததான, பிறகு, அந்தச் செய்தித்தாள்கள் மூலைக்கு ஒன்றாய்ச் சிதறிக் கிடந்தன. சாறு பிழிந்து எறியப்படும் சக்கையைப் போல் அவை சிதறிக் கிடந்தன. அவன் மனமும் அந்தப் பத்திரிகைத் தாள்களைப் போலவே பலவகையிலும் சிதறுண்டு கிடந்தது. அன்றாடத் தேவைக்கும் பொழுது போக்குக்கும் தேவையான பணம் இல்லையே என்ற வாட்டம் ஒருபுறம், சிகரெட்டுக் கடைக்காரனிடத்தில் கடன் வைப்பதென்றால் அவன் கடையையே மூடிவிட வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டான் என்பது ஏற்கனவே இவனுக்குத் தெரிந்த விஷயம். காலி பெட்டிகளின் அலங்காரத்தால்தான் அந்தச் சிறு வெற்றிலை பாக்குக்கடை நடைபெற்று வருகிறது என்பதும் தெரியும். அதனால்தான் சிகரெட்டுக்குக் காசு இல்லை என்றாலும் கடன் கேட்க வழி தோன்றாமல் இருந்தது. முதலில் சிகரெட் ஒன்றாவது கிடைத்தால் போதும் என்ற நிலைமைக்கு வந்தவனைப் போலக் காணப்பட்டான். ஒருவகையான வெறி பிடித்தவனைப் போன்ற மனநிலைமையில் தான் இருப்பதை அவனே உணர ஆரம்பித்தான். அடுக்களைக்குச் சென்று காப்பியாவது குடிக்கலாம் என்று சென்றான். "அக்கா! காப்பி போட்டிருக்கிறாயா?” "இதோ போடுகிறேன்" வாழ்க்கை மந்தமாக இருந்தது. வேலைக்காரி பழங்கந்தல் புடைவை கட்டிக்கொண்டு துடைப்பம் ஒன்றால் பெருக்கிக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் அம்மைவடு நிறைய இருந்தது. பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது. வீடு வெறிச் சென்றிருந்தது. மேலே கூரையில் சில ஒட்டடை காற்றில் அசைந்துகொண்டிருந்தன. ஒரு சில அப்படியே விழுந்து விடுவது போலத் தொங்கிக் கொண்டிருந்தன. இருந்தாலும் ஒரு சில மெல்லிய நூல்கள் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தன. மனம் சோர்ந்து விட்டாலும் ஏதோ சில நம்பிக்கைகள் மனிதனை வாழவைக்கின்றன என்று சில எண்ணங்கள் அவன் மனத்தில் ஓட ஆரம்பித்தன. "அக்கா! சில்லரை ஏதாவது இருக்கிறதா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/79&oldid=898278" இலிருந்து மீள்விக்கப்பட்டது