பக்கம்:வழுக்கு நிலம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ரா. சீனிவாசன் "ஆனி மாதத்தில் முடித்து விடலாம்." "அதற்கென்ன! உங்கள் சவுகரியப்படி செய்யுங்கள்.” "கலியாணமெல்லாம் நாங்களே இங்கேயே நடத்தி விடுகிறோம்." "ஆகா! உங்கள் விருப்பம்." "நீங்களும் நகை நட்டு எல்லாம் ஒன்றும் அதிகம் செய்ய வேண்டியதில்லை, இருபதினாயிரம் போதும்." "அதற்கென்னங்க. எங்கள் மருமகளுக்குத்தானே போடப் போகிறோம்." இச்சொற்களைக் கேட்டவுடன் பார்வதிக்குத் துக்கி வாரிப் போட்டது. தன் வருங்கால வாழ்வில் மறுபடியும் இருள் சூழ்வது போல இருந்தது. எப்படியும் அண்ணன் தன்னைக் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கையும் உள்ளத்தில் எழுந்தது. "என்ன செய்வது! பெரிய இடம். அந்த இடத்தில் இதைக் கூட செய்யாவிட்டால் மதிப்பு என்ன இருக்கும். மாணிக்கத்திற்கு அவள் மனைவியாக வாய்க்க வேண்டு மானால் இதையாவது செய்ய வேண்டாமா" என்று அவள் மனம் எண்ண ஆரம்பித்தது. "என்ன அக்கா! அப்படியே சாப்பிடாமல் வைத்திருக் கிறாய்! மெல்ல முடியவில்லையா?" "விழுங்க முடியவில்லை" என்று சொல்லிய வண்ணம் பக்கத்திலிருந்த குவளையில் இருந்த நீரைச் சிறிது அருந்த ஆரம்பித்தாள். 11 அன்று மூன்றாவது சனிக்கிழமை விடுமுறை நாள். மனம் சுறுசுறுப்பாக இல்லை. ஆபீசுக்குப் போகவேண்டிய கடமையுமில்லை. அதனால் அதைச்சுற்றியெழும் சுறுசுறுப்பும் கடமையுணர்வும் அன்று இல்லை. நிதானமாகவே பொழுது போய்க் கொண்டிருந்தது. சில சமயத்தில் பொழுது அப்படியே தேங்கி நின்றுவிடுவதைப் போன்ற உணர்வும் தோன்ற ஆரம்பித்தது. சிவராமனுக்குத் தன் விருப்பப்படி பொழுதைப் போக்குவதற்கு ஒன்றும் தோன்றவில்லை. அன்று வந்த செய்தித் தாளின் அரசியல் செய்திகளை ஆவலாகப் படித்தான். ஆனால், அடுத்துத் தொடர்ந்து வாரக் கட்டுரைகளைச் சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/78&oldid=898275" இலிருந்து மீள்விக்கப்பட்டது