பக்கம்:வழுக்கு நிலம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ( ரா. சீனிவாசன் வெளியே பாம்பாட்டி ஒருவன் பாம்புப் பெட்டி ஒன்று கொண்டு வந்திருந்தான். பாம்பு அப்பெட்டியில் அடங்கி யிருந்தது. அதைத் திறந்து வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தான். பாம்பு படமெடுத்து ஆடியது. புஸ் என்று சீறியது. பக்கத்தில் அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்து கொண்டு குங்குமம் இட்டுக் கொண்டிருந்த தன் அண்ணி சீறியது போல இருந்தது. "நீ குங்குமம் இட வேண்டிய இடம் இதுவல்ல. அலங்கரிக்க வேண்டிய இடம் பட்டணத்தில் இருக்கிறது.” என்று கையில் இருந்த குங்குமத்தை வாங்கிக் கொண்டாள். பார்வதிக்கு ஒன்றுமே தோன்றவில்லை. எதிரே தெருவில் அழகான பாம்பு ஆடிக் கொண்டிருந்தது. ஒன்றும் பேசாமல் அந்த இடத்தை விட்டு எழுந்தாள். சற்றுத் தொலைவில் வந்து நின்றாள். அந்த வாசலையே நோக்கிய வண்ணம் நின்றாள். அதனின்றும் பார்வை வேறு திசைக்குத் திரும்பவில்லை. அந்த வாசற்படி மங்கலாகக் காட்சியளித்தது. அவள் உள்ளம் வருத்தத்தில் ஆழ்ந்தது. ‘. அழகான ரோஜா மலர். முள்ளில் கிடந்த மலர்தான். அது அந்த இடத்தை விட்டுப் பறிக்கப்பட்டது. முள்ளை விட்டு நீங்குகிறோமே என்ற அற்ப சந்தோஷம் அதற்கு உண்டாயிற்று. பிரிந்த பிறகு மெல்லத் தன் பொலிவு குன்றத் தொடங்கியது. ஓரிரண்டு நாட்கள் சென்றன. அதன் இதழ்கள் மெல்ல உதிரத் தொடங்கின. உதிரும் ரோஜா இப்படிச் சிந்திக்கத் தொடங்கியது. அவள் கூந்தலை அவிழ்த்தாள். அதிலிருந்து விழுந்து பொல பொலவென்று உதிர்ந்த ரோஜா மலர் ஒன்று தன் கதையைச் சொல்வது போலப் பார்வதிக்கு விளங்கியது. அண்ணி குங்குமம் இட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நீங்கினாள். "அந்த வாழ்வு முட்கள் பொருந்தியதுதான். அதை விட்டு வந்திருக்கக்கூடாது. எவ்வளவு திட்டினாலும் வீட்டை விட்டுப் போ என்று விரட்டினாலும் அந்த இடத்தை விட்டு வந்திருக்கக் கூடாது. பணத்தை அடிப்படையாக வைத்து அவர் அனுப்ப எண்ணியிருக்கலாம். ஆனால் வாழ்வை அடிப்படையாக வைத்து நான் அதை எதிர்த்திருக்க வேண்டும். அணைக்க உரிமை உடையவர்க்கு அதட்டிப் பேச ஏன் உரிமை இல்லை? என் வாழ்வை மலர்விக்கும் கணவனைவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/96&oldid=898319" இலிருந்து மீள்விக்கப்பட்டது