பக்கம்:வழுக்கு நிலம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 95 வந்திருக்கக் கூடாது. அளவுக்கு மீறிச் செலவு செய்ததால் அவர் வாழ்வு ஆடி மாதக் காற்றுக்கு ஆட்டங் கொடுக்கும் மரத்தைப் போல அசையத் தொடங்கியது. அதில் வீற்றிருக்கும் பறவை அதற்காக அந்தக் கிளையை விட்டுப் போகக் கூடாது. அப்படி வந்ததற்குக் காரணம்: அவர்தானே பத்தாயிரம் கொண்டு வந்தால் வா, இல்லை என்றால் பிறந்தகத்துக்குப் போ என்று கட்டளையிட்டவர். அதை மீறுவதால் அவருக்குத்தானே கேடு சூழ்கிறேன். நான் வந்ததில் தவறு இல்லை. அப்படியானால் அண்ணி சொன்னது அதில் மட்டும் என்ன தவறு இருக்கிறது. என் எதிர்கால வாழ்வை நினைப் பூட்டினாள். நான் நிரந்தரமாக வாழ வேண்டிய இடம் இதுவல்ல என்பதை உணர்த்தினாள். உன்னுடைய கடமை அங்கே இருக்கிறது என்பதைச் சுட்டினாள். அதில் என்ன தவறு? ஏன் தவறு இல்லை? வந்து சில நாட்கள் ஆகவில்லை. அதற்குள் இவ்வளவு உரிமையா என் அண்ணிக்கு? நான் அண்ணனோடு உடன் பிறக்கவில்லையா? உடன் வளர வில்லையா? இந்த வீட்டின் ஒவ்வொரு கல்லும் என் பெயரைக் கேட்டால் சொல்லுமே. இங்கே வளர்ந்திருக்கும் செடிகள் எல்லாம் நான் நீர் ஊற்றி வளர்த்தவைகள் தாமே. நான்தானே அண்ணனிடம் இவளை மணக்கும்படி கூறினேன். மறுத்த அண்ணனை நான்தானே வற்புறுத்தினேன். இந்த வாசற்படிக்கு இதுவரை மஞ்சளும் குங்குமமும் பூசி அணி செய்தது யார்? வீட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் பெருக்கிச் சீர் செய்தது யார்? அண்ணன் இட்ட வேலைகளை யெல்லாம் இதுவரை தட்டாமல் செய்து வந்தது யார்? முடியாது; இனி அரைகூடிணம் கூட இங்கே இருக்க முடியாது; அப்படியானால் எங்கே போவது? அங்கே போவதற்கு வழி செய்து கொடுத்தார்களா? வீட்டில் இருந்த சொத்து, நிலமெல்லாம் கலியாணத்திற்குத்தானே கொட்டித் தொலைத் தார்கள். அப்பா எனக்காக இனி எங்கே பொருள் தேடப் போகிறார்? அவர் முயன்றால் மட்டும் அவரால் சாதிக்க முடியுமா? அப்படியானால் என் வாழ்வு? கருகிய மலராகப் போவதற்குக்கூட ஓர் இடம் வேண்டுமே. குப்பையைக் கொட்டி வைக்கக்கூட ஒர் இடம் வேண்டுமே? இல்லா விட்டால் வருவார் போவார் எல்லாம் துற்றிப் தொலைப் 33 பார்களே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/97&oldid=898321" இலிருந்து மீள்விக்கப்பட்டது