பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. - வழுவிலா மணிவாசகர் வாழ்க்கைன்ய் ஒரு சில புராணங்கள் உணர்த்துகின்றன. அவ்வாறு உணர்த்தும்போது அவை அறிந்தோ அறியாமலோ அவர் வாழ்வில் பல கற்பனைகளைப் புகுத்தி, அவர்தம் தூய தொண்டு வாழ்வுக்கு இழுக்கைத் தேடிவிடுகின்றன. நம் இந்தியநாடு உரிமைபெற முயன்ற அண்ணல் காந்தி அடிக ளார் முதலிய நல்லவர் மேற்கொண்ட தியாக வாழ்வையெல் லாம் திரித்து வரலாற்று நூலாக எழுதிப் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் பயில அனுப்பப்பெற்றன எனவும் , அவற்றை மாற்றி அமைக்க வேண்டுமெனவும், இன்றைய அரசாங்கத்தார் பாடுபடுவதைக் காண்கின்ற நமக்கு, பல ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாறுகளில் பொய்யும் வழுவும் எவ்வாறு புகுத்தப் பெற்றிருக்குமென உணர முடி கின்றதன்ருே? ஆளும் நிலையில் இருந்த ஆங்கிலேயர் தமக்கு மாசு உண்டாகர் வகையில் உரிமைக்குப் பாடுபட்ட மற்ற வரை இழித்தும் பழித்தும் வரலாறு எழுதினர். நல்ல வேளை நாம் இன்னும் சில ஆண்டுகள் உரிமை பெருது மாற்றி யெழுதும் நிலை உண்டாகா திருந்திருக்குமானல் அவையே வரலாற்று உண்மைகளாக நிலைபெற்றிருக்கு மன்ருே? மாணிக்கவாசகர் வரலாறும் அத்தகையதே. பாண்டிய அரசனது ஆணைவழி அக்கர்லத்தவர் சிலர் மணிவாசகர். உண்மைத் தொண்டினை மறைத்து, மன்னவன் புகழ் பரவும் வகையில் கதை எழுதிவிட்டார்கள். அதுவே பின்னல் புராணங்களாக உருப்பெற்று இன்று நாட்டில் உலவுகின்றன. - மற்றும்-அககாலத்தில் வாழ்ந்த மன்னரும் மற்றைய அமைச்சர்களும்-அவர் வாழ்க்கையை திருத்தியும், மாற்றியும் எழுதவேண்டிய தேவை அவர்களுக்கு உண்டாயிற்று. மணி. வாசகர் தம் பண்பாலும் கடமை உணர்ச்சியாலும், தொண்டின் திறத்தாலும் நாட்டு மக்கள் உள்ளங்களைக் கவர்ந்துவிட்டார். வழிவ்ழியாக அமைச்சராக இருந்த, வருக்கும் மன்னவனுக்கும் அதல்ை பொருமை உண்டாயிற்று: இந்த நிலை இன்றும் நாட்டில் காண்கிருேம், நல்ல தொண்டு செய்து, நாட்டுமக்கள் முன்னிலையில் பேரும் புகழும் பெற்று.