பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை § உயர்ந்தவர் சிலரைக் கண்டு மற்றவர் பொருமைக்கொண்டு, அவர்களுக்குக் குற்றம் கற்பித்து உலவுவதைக் காண்கின் ருேம். எனவே மணிவாசகர் காலத்து மந்திரிகளும் மன்னனும் இதற்கு விதிவிலக்காக அமையவில்லை. பண்பாலும் தொண் டாலும் மக்கள் மனங்கவர்ந்த மணிவாசகர் மற்ருெரு வகை யிலும் நாட்டு மக்களால் பாராட்டப்பெற்ருர். குதிரை வாங்கச் சென்ற விடத்தில் குருவினைக் கண்டார். எனவே தம் வசமிழந்தார்; அமைச்சர் பதவியைத் து'வென்று தள்ளினர். தாம் அதுவரையில் சேர்த்த பொருளை அரன் கோயிலுக்கென அர்ப்பணித்தார். மன்னவன் பணத்தைத் திருப்பிவிட்டார். கோயில் வளர்ந்தது; கூடவே மாணிக்க வாசகர் புகழும் வளர்ந்தது. இதைக் கண்டு மின்னவன் பொருமினன். ஆம். பாண்டிய நாட்டில் மட்டுமன்றித் தமிழ்நாடு முழுவதும் அவர் புகழ் ஓங்கியதைக் கண்டு மன்ன வன் பொருமினன், மந்திரிமார் சூழ்ச்சி செய்தனர். அந்தச் சூழ்ச்சியில் முகிழ்த்ததே இன்றைய கதை. புகழ் பெற்ற வாசகருக்கு மர்சு கற்பிக்க நினைத்தன. மந்திரியும் மன்னனும். எனவே, அரசன் பணத்தைக் கொண்டுதான் கோயில் கட்டினர் எனப் பொய் வாதத்தை உண்டு பண்ணினர்கள் அவர்கள். மாணிக்கவாசகரை நாட்டில் பழிப்புக்கு ஒருவராக்க வேண்டுமென முன்ருர்கள். மன்னன் அவர்தம் கூற்றுக்குச் செவி சாய்த்தான்-மதி ம்றந் தான். என்ருலும் அவன் செய்கை அவனது அறியாமையை விளக்குகின்றது. பெருந்துறையில் கோயில் கட்டியதை மன்னவன் அறியான? 'ஒற்ருெற்றித் தந்த பொருளை மற்று மோர் ஒற்றினல் ஒற்றிக் கொளல் என்ற வள்ளுவர்தம் அரசியல் வாழ்ந்த நாட்டில்-தன் நாட்டின் எல்லையில் தன் பணியாளர் ஒருவர் செய்யும் செயலை அறியத் திறமற்ற மதி: யில்லா மன்னகை அவன் விளங்கினை? மணிவாசகருடைய சுற்றத்தாரெல்லாம், அவர் பெற்ற பொருளையெல்லாம் கோயில் கட்டிச் செலவு செய்த தன்மையை,