பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வழுவிலா மணிவாசகர் தழுவிய கிளைஞர் நட்டோர் சார்வுளோர் தக்க சான்றேர் குழுவினைக் காக்க வேண்டும் குறிப்பிலீர் போலு நீவிர் ஒழுகுறு செயலி ேைல: உம்செய லுமக்கே சால அழகிது போலும் (வாத உப. படலம், 82.) என்றும், விரைசெறி தாராற் கின்று வெம்பரி வருவ தாக உரைசெய் தீர்நாளை நீவிர் - என்சொல வல்லி ரையா? (“81) என்றும் வெளிப் படையாக அவர் பொருளைச் சுற்றத் தாருக்கும் மற்றவருக்கும் கொடுக்காது கோயில் கட்டிய நிலையையும், மன்னனுக்கு மறுநாள் பதில் சொல்லத் தெரியாது தடுமாற வேண்டிய நிலையையும் எடுத்துக் கூறும் போது மன்னன் மட்டும் இவற்றை உணராதிருந்தது வியப்பல்லவா? கோயில் கட்டிய பொருள் மாணிக்கவாசகருடையதென் பதை மன்னன். உணர்வான். பாண்டியன் பொருளையெல் லாம் ஒட்டகத்தின்மேல் ஏற்றிப் பாதுகாவலோடு அனுப்பிய பிறகே தம் பொருளோடு கோயில் புகுந்து, சொக்கநாதர் முன்சென்று தமது பொருளையெல்லாம் அவன் திருப்பணிக் குச் செலவிட அருள் செய்யுமாறு வேண்டிப் புறப்படுகிருர் எனப் பரஞ்சோதியார் காட்டுகின்ருர், 'ஒன்று வேண்டுமிப் பொருளெலாம் உனக்குமைம் பொறியும் வென்று வேண்டுநின் அன்பர்க்கு மாக்குக வெள்ளி