பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 11 மன்று வேண்டிநின் முடிய வள்ளலென் குறையீ(து) என்று வேண்டிநின்று ஏத்துவார்க் கிறைவன தருள்போல் ஆதி சைவளும் அருச்சகன் ஒருவன்நேர் அணைந்து பூதி யீந்தனன் நமக்கிது போலிலை நிமித்தம் ஈது நன்நெறிக் கேதுவென் றிருகையேற் றணிந்து வேத நாதனை யிறைஞ்சினர் விடைகொடு மீண்டார்’ (வாத. உப. படலம், 24-25) என்று இறைவன் அருள்பெற்று, மதுரையிலிருந்து புறப்படு வதற்குமுன் தாம் அதுவரை வருந்திப் பெற்ற அமைச்சர் ஊதியமாகிய பெரும் செல்வத்தை ஆண்டவன் கோயிலுக்கே என்ற உறுதியுடன் புறப்பட்டுச் சென்ருர். குதிரைகள் இருந் திருப்பின் அவற்றை வாங்கி அனுப்பிவிட்டு, பெருந்துறையி லேயே தங்கித் தம் பொருளால் கோயில் அமைக்கவேண்டும் என்ற திட்டத்துடனேயே அவர் புறப்பட்டுச் சென்ருர். ஆனல், குதிரைகள் கிடைக்கவில்லை. எனவே, பணத்தைப் பாண்டியனுக்குத் திருப்பி அனுப்பிவிட்டுத் தம் பணிவழியே தலைநின்ருர். அதற்கென ஆண்டவன் வலியவந்து ஆட் கொண்டு அருள் செய்தான். கோயில் வளர வளர அவர் புகழும் வளர்ந்தது. ஒரு வேளை மணிவாசகர் அனுப்பிய பொருள் அரசனிடம் சேரா வகையிலே இடையுள்ளார். சதி செய்திருக்கலாம்-அன்றி சேர்ந்தும் இருக்கலாம். ஆயினும், அவரது முன்னைய பண் பாட்டினிடைப்பட்ட தொண்டின் திறனும் அமைச்சியற்றன் மையின் சிறப்பும் தந்த புகழோடு கலைக் கோயிலாகத் திகழும்