பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுவிலா மணிவாசகர் உண்மையை உணர்ந்து கொள்ளுமா? ஆம்; பெருஞ் சாத்தனும் பழநிக்கொற்றலும், அவர்கள் போன்ற தொடியவர்களும், அவர்கள் வாய்ச்சொற் கேட்கும் என்போன்ற பதவி வெறிபிடித்த பாவிகளும் இருக்கும் வரையில் உலகம் எப்படி உண்மையை உணரும்-எப்படி உய்த்து உணரும்? எல்லாம் வல்ல இறைவனே! நீயே என் வருங்காலத் துக்கு வழிகாட்ட வேண்டும். இனி, இப் பாண்டி நாட்டை என் தாயகத்தார் யாரேனும் ஆளட்டும். எனக்கென ஒன்றும் வேண்டாம். இதோ உன் சன்ன திக்கு ஓடிவருகிறேன். மாணிக்கவாசகரும் அங்கேயே உன்முன் மணிமொழி பாடிக் கொண்டிருப்பதாகக் கூறி ஞர்களே. இதோ வந்து, உங்கள் இருவரையும் ஒருசேரக் கண்டு உய்தி பெறுவேன். உயர்ந்த தெய்வ நெறிக்கு வழிகோலுவேன். படமுடியாது இனித் துயரம் - பட்டதெல்லாம் போதும்-மற்றவரை படுத்தியதெல் லாம் போதும்-நல்லவரை நலியுறுத்தியதெல்லாம் போதும்-நாயகமே மணிவாசகரே! சொக்கேசரே! மீட்ைசியே! இதோ நான் உம் அடிமை. உம் அடி நோக்கி அலமறுகின்றேன். அஞ்சேல் என்று ஆதரியுங் "கள் அண்ணுல்! அந்தோ! அம்மா! (ஒடுகிறன்.)