பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-4 காட்சி-4 பெருஞ்சாத்தன் : (தனிமொழி) 'தன்வினை தன்னைச் சுடும்', 'வினை விதைத்தவன் வினையை அறுப்பான்’ என்பன போன்ற பழமொழிகள் என் அளவில் எப்படி உண்மையாகிவிட்டன! இனி என் வாழ்வு எதற்கு? அன்று என் காதலிக்காக உற்ருரைமற்ருரை இழந்தேன். இன்ருே என் காதலியை இழந் தேன்-அதுமட்டுமா? அமைச்சர் பதவியும் பறி போயிற்று. நாட்டிலே என்றென்றும் கெட்ட பெயரும் உண்டாயிற்று. தெய்வத்திற்கும் மாறுபட்டேன். அறத்தைக் கைவிட்டேன். பழிக்குத் துணையானேன்; பாவத்தை வளர்த்தேன்; ஆம்! அத்தனையும் இன்று என்னையே சாகடிக்கும் நிலைக்குப் பற்றிச் செல்லுகின்ற னவே. வஞ்சுளம்! என் அருமைக் காதலி வஞ்சுளம்! ஆம்; நான் எத்துணைப் பெரிய அமைச்சராக இருந் தாலும் அவளுக்கு அடக்கமாகவன்றே இருந்தேன்! அவள் சம்பாதித்த பொருள்தான் எத்தனை! அத்தான், அத்தான்’ என்று எப்படி வளைய வளைய வருவாள்! அந்தோ! அவள் முதுகில் அந்தப் பிரம்படி வீழ்ந்த வேகத்தில் அப்படியே மயங்கி வீழ்ந்தவள் எழுந்திருக்க வில்லையே. அந்தப் பிரம்படிதானே அந்த வாதவூரரைஇல்லை-மாணிக்கவாசகரை உல்குக்கு உயர்ந்தவராகக் காட்டிற்று. தெய்வ உண்மையினையும் அறநெறியினையும் மறைத்து விடலாமென்றல்லவா மனப்பால் குடித்தேன் | அறம் வெல்லும்; பாவம் தோற்கும்' என்ற நீதிமொழி எப்படி உண்மையாகி விட்டது. தெய்வமே! இனி உன்னிடம் புகலன்றி வேறு வழியில்லை. உன்னை இல்லை யென்று சொல்லிக் கொடுமை இழைத்தது போதும். அதனால் நாடே நலிவுற்றதே! அரசன் தன் ஒரு மைந்தனை