பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வழுவிலா மணிவாசகர் இழந்தான். பழநிக்கொற்றன் தன் தாயை இழந்து அலமறுகிருன் எனக் கேள்விப்பட்டேன். நானே எனது வாழ்வின் வைப்பாகிய வஞ்சுளத்தைய்ே இழந்தேன். தமிழ் நாடு தான் உள்ளவரை எங்கள் வாழ்வினை எண்ணித் திருந்துமா? எத்தனை பொய்கள் சொன்னேன்! மணிவாசகர் தம் பேரும் புகழும் கண்டு எவ்வளவு உள்ளம் புழுங்கினேன்!. அதனுலேயன்ருே இத்தனை கொடுமைகளை நானும் மற்ற வரும் சேர்ந்து அவருக்கு இழைத்தோம்! முடிவில் என்னுயிற்று? அவர் புகழ் உலகம் உள்ளளவும் ஓங்கி வாழும். நாங்கள் குடியிழந்து, வாழ்விழந்து, வளமிழந்து இன்று நிற்பதோடு என்றென்றும் பழியேற்றல்லவா இருக்கவேண்டும். இதுவரை எனக்கென இருந்த இந்தப் பதவியும் பறிபோயிற்று. என் செய்வேன்? அந்த மாணிக்கவாசர் தம் பாதங்களைப் பணிந்து மன்னிப்புக் கேட்பதன்றி வேறு என்ன செய்ய முடியும் ஆம்; அவர் மீட்ைசி சொக்கேசர் திருக் கோயிலில் இருக்கிருர் என்றல்லவா சொன்னர்கள்: இதோ ஒடுகிறேன். அவர் அடியில் வீழ்ந்து என் அல்லல் வாழ்வைப் போக்கிக் கொள்ளுகிறேன். (தூரத்தே பழநிக் கொற்றன் வாடிய முகத்தோடு வருகிருன்.) என்ன! அதோ வருகின்றவன் பழநிக் கொற்றனல் லவா? எப்படித் தளந்து விட்டான்? முகம்தான் எப்படிச் சோர்ந்து போயுள்ளது? பாவ்ம்! அவனும் வாழ்விழந் தான். அவன் என்மைத்துனியை எண்ணி எண்ணி ஏங்கித் திருமணமும் செய்து கொள்ளாதிருந்தான். அவன் தாய் எங்கேயோ கிராமத்தில் இருந்துகொண்டு இவளுல் எல்லாக் காரியங்களையும் சாதிப்பதாக சொல்லிக் கொண்டு ஊரெல்லாம் கையுறையாகப் பொருள் பறித்துக்கொண்டிருந்தாள். ஆனல் இந்தப் பிரம்பன் அவள் உயிரையுமல்லவா கொண்டு சென்றுவிட்டது!