பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-4, காட்சி-4 121 (பழநிக்கொற்றன் அருகில் வந்து 'விம்மி விம்மி அழுகிருன். இவன் தேற்றுகிருன்.) தம்பி வீணில் அழுவதில் பய்னில்லை. இப் பாண்டி நாட்டு எல்லையிலிருக்கும் பழநிப்பெருமான் பெயர் கொண்டாய். ஆனல் அவனைப் போற்றும் பண்பு இல்லை. ஆகவே வந்ததைப் படவேண்டுமே! ஆமாம்; உன் தாயின் பிணத்தையாவது கண்டாயா, - பழகி : (அலறி அழுது) ஐயோ, அண்ணு! அந்தக் கொடுமை யினை நினைத்தாலும் நெஞ்சம் வேகிறது. அந்தப் பிரம்படி அவள் உடலை நன்கு தாக்கியிருக்க வேண்டும். நான் இங்கே உங்கள் இழப்பெல்லாம் பார்த்துக்கொண்டு, பிறகு ஊர் செல்லச் சில நாட்களாகிவிட்டன அல்லவா? சென்று பார்க்கிறேன். அவள் உருவம் தெரிய்ாதபடி உடல் அழுகிக்கிடந்தது. பக்கத்தில் உள்ளவர்கள் யாரோ எல்லாப் பொருள்களையும் கொள்ளை கொண்டு விட்டார்கள். நான் இனிப் பொருளுக்காகத் தொல்லைப் படப் போவதில்லை. என் தாய் என் பெயரைச் சொல்லிச் கையூட்டாக எவ்வளவு சம்பாதித்தாள்? ஆனால் அவள் உருவைக்கூடச் சரியாகக் காணமுடியாதபடி அழுகி நாற்றமெடுத்த எலும்பும் தோலும் சேர்ந்த கூட்டுப் பிண்டத்தைக் காண நேர்ந்த ஒன்றே என்னை வாட்டு கிறது. (அழுகிருன்.) பெருஞ் தம்பி அழாதே! நாம் செய்த வினை நம்மேல் பழி தீர்த்துக்கொண்டது. அ வ் வள வு தா ன். இந்த உண்மையை உணராது என்னென்னவோ கோட்டை கட்டினேம். கோட்டை சரிந்ததோடு உலகம் உள்ளள வும் தீராப்பழியும் நேர்ந்தது. நம் பதவிகள் போயின. ஏன்? அரசன் வாழ்வும் இத்துடன் சரிதான். பழகி அண்ணு; உண்மைதான், நீ கூறியது! எனக்கு உதவிய அ ந் த ப் பெரியவருக்கு-மாணிக்கவ்ாசருக்கு நாம் இழைத்த கொடுமைகளை எண்ணினலும் நெஞ்சம் நடுங்குகிறது.