பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வழுவிலா மணிவாசகர் பெருஞ் : தம்பி எண்ணிக்கொண்டிருப்பதில் பயனில்லை’ அவர் காலடியில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டாலன்றி இனி வேறு வழியில்லை-வா! போகலாம். அவர் கோயிலில் உள்ளதாகச் சொன்னர்கள். அங்கே சென்று காணலாம். - (இருவரும் போகின்றனர். கோயில் வாயிலில் அரசன் எதிர்ப்படுகின்ருன்.) (இருவரும் அவனடியில் வீழ்ந்து வணங்குகின்றனர்.) அசர : எங்கே இங்கும் வந்தீர்கள்? கொடியவர்களே! உங்களை நம்பி நம்பி நான் பட்டது போதும். நாடு குறைந்து, நலம் குறைந்து, பெயர் குறைந்து, புகழ் குறைந்து, இன்று என் குலக் கொழுந்தையே இழந்தேன். இன்னும் என்ன சதி செய்ய இங்கே வந்து சேர்ந்தீர்கள்? அப்பால் ஒடுங்கஇ. (இருவரும் மறுபடியும் வணங்கி எழுகின்றனர்.) இருவரும் : அரசர் பெரும! எங்கள் தவறுகளே உணர்ந்து நாங்கள் திருந்தி விட்டோம். நாங்கள் பட்டம் பதவி நாடி வரவில்லை. தங்களுக்கு ஏதும் சொல்லி மனமாற்றம் செய்ய வரவில்லை. நாங்கள் செய்த கொடுமைகளுக் கேற்ற தண்டனைகளைப் பெற்றுவிட்டோம். நான் என் மனைவியை இழந்தேன். இதோ இவன் தன் தாயை இழந்ததோடன்றி அவளை உருத்தெரியா நிலையிலேயே கண்டான். நாங்கள் இருவரும் இனி அந்த மாணிக்க வாசகரைக் கண்டு, காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்கவே :செல்லுகிருேம். . . அரச : அப்படியா? நல்லது. என்போன்றே கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா? நல்லது வாருங்கள். நானும் அவரைக் காணத்தான் போகின்றேன். அவர், இதோ, இக் கோயிலின் உள்தான் இருக்கிருர். அனைவரும் சென்று, அவர் காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டு உய்யலாம். இருவரும் : அப்படியே. -- (அனைவரும் கோயிலுள் செல்லுகின்றனர்.)