பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-4 - காட்சி-5 மாணிக்கவாசகர் : (இறைவன் முன் நின்று தனிமையில் தம்மை மறந்து கசிந்துருகிப் பாடிக்கொண்டிருக்கிரு.ர். மூவரும் தொலைவில் நின்று கேட்டுக் கண்ணிர் பெருக நிற்கின்றனர்.) நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்ன மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்! அரிய பொருளே அவிசிை அப்பா பாண்டி வெள்ளமே! தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே! பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும் பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன் மண்டலத் தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண் சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பெர்ன்மேனி பாடுதுங்காண் அம்மாய்ை! அரசன் : (தூரத்தே) ஆகா! என்ன உருக்கமான பாடல் நான் செய்த கொடுமைகளையும் இழைத்துப் பாடு கின்ருரே? தம்மை மறந்த நிலையில் உள்ள அவரை அணுக வேண்டாம். நாம் சற்றுத் தள்ளியே இருப்போம் இருவரும் : ஆ ஆ! அதோ எங்கோ மெள்ள அக் கடம்ப மரத்தடியில் செல்லுகின்ருரே! (கடம்ப மரத்தில் ஒரு கிளையில் கிளியும் ஒன்றில் குயிலும் உள்ளன. அவற்றை நோக்கிப் பாடுகின்ருர் மணிமொழியார்.)