பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வழுவிலா மணிவாசகர் மாணி : சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன் கோலம் பொலியும் கொடிகூருய்-சாலவும் ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும் கோதிலா ஏருங் கொடி. அரச : ஆகா கிளியினிடம் எப்படி மாற்ருர் உள்ளம். அடைந்த துண் என்ற நிலையைப் பாடிக் காட்டி விட்டார். அதோ குயிலிடம் பாடுகின்ருர் போலும். மாணி ; கீத மினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான் பாத மிரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால் சோதி மணிமுடி சொல்லில் சொல்லிறந்து நின்ற தொன்மை ஆதி குணமொன்று மில்லான் அந்தமி லான்வரக் கூவாய். அரச : (தூரத்தே)-கேட்டீர்களா? ஆகா! க ட வு ள் தன்மையை எப்படி எப்படிக் குயிலிடம் கூறுகின்ருர்? அந்தக் கிளியும் குயிலும் அவர் பாடல்களைக் கேட்டு எப்படி அசைவற்று நிற்கின்றன என்பதைக் கண்டிர் களா? என்ன? எங்கேயோ போகிருரே! அதோ ஒரு தும்பி-வண்டு-பறக்கிறதே. அதன் அருகே போய் ஏதேதோ பாடுகிருரே! மாணி : பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாடோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட ஐயா! என் ஆரமுதே! அம்பலவா என்றவன்றன் செய்யார் மலரடிக்கே சென்று தாய் கோத்தும்பி! அரச : எத்தனை அருமையான பாடல். உலக வாழ்வையும அவர் விடுபட்ட நிலையினையும் எவ்வளவு தெளிவாகக்