பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-4, காட்சி-5 127 அந்தப் பெருமானை-சொக்கேசன நேரில் கண்டவர்கள் நீங்கள். உங்கள் பழி பாவம் அனைத்தும் அவன் பார்வை யில் பட்டு நீருயின. ஆம். நான் இனி விடுதலை அடைந்த பறவையாகி விட்டேன். விருப்பம் போல் யாண்டும் அவன் புகழ்பாடிச் செல்லலாம். அதுதான் அவனுடைய ஆணையும்கூட."எனக்கு இந்தப் பெருவாழ்வை-விடுதலை வாழ்வை-மெய் உணர்வின் வாழ்வை-இறை இன்ப வாழ்வை-யாருக்கும் பணியா வாழ்வை-எவருக்கும் கைகட்டா வாழ்வை-எவர் சொல்லையும் எதிர்பார்க் காத வாழ்வை-எஞ்ஞாத மெய்ஞான வாழ்வைத் தந்த -தர வாய்ப்பாக நின்ற உங்களை நான் பாராட்டு கிறேன். சென்று வாருங்கள். ஆண்டவன் உங்கட்கு எல்லா நலமும் அருள்வான். அரச அண்ணலே! தாங்கள் இனி அமைச்சர் பதவியை ஏற்று எனக்கு வழி காட்ட மாட்டீர்கள் என்பதறிவேன். ஆயினும் வெளியே எங்கும் போகாது இங்கேயே இம் மதுரைப் பெரு நகரிலேயே இருந்துகொண்டு எங்கள் வழிபாட்டினை ஏற்று எங்களை என்றென்றும் கடைக் கணித்தருள வேண்டுகின்ருேம். இறைவனே! இருவரும்: ஆமாம்! எங்கள் இருவர் வேண்டுகோளும் அதுவே. நாட்டு மக்கள் விருப்பமும் அதுவே! மாணி : உங்கள் விருப்பம் அதுவாயின் நல்லதுதான். ஆனல், நான் இனி விடுதலைப் பறவை. ஓரிடத்தில் ஒரு நாளைக்கு மேல் தங்கிலுைம் பற்றும் பாசமும் பற்றிக் கொள்ளும். மற்றும் ஆண்டவன் நாட்டில் பல பகுதிகளில் கோயில் கொண்டுள்ளான். என்னைக் குருந்தமரத்தடியில் அடிமை யாகக் கொண்ட அந்த வேளையில் அக் கொற்றவன் மண்மேல் என்னைப் பாடுவாயாக' எனப் பணித்தான். மற்றும் நான் இன்னும் உலகில் பல செயல்கள் செய்ய வேண்டியிருப்பதாலேயே என்னைவிட்டுச் செல்வதாகவும்