பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு 21 அதையும் உடன் அனுப்பி வைத்தரர். யாமார்க்கும் குடி யல்லோம் யாதுமஞ்சோம், மேவிளுேம் அவனடியார் அடியா ரோடும்' என்றது அவர் வாய் முன்னுள் தலைமை அமைச் சனும் அவன் துணைவரும் முன்னேற்பாட்டின்படி எல்லா வற்றிற்கும் இசைந்து ஒலையையும் பொன்னையும் அரசனிடம் ஒப்படைப்பதாக ஏற்றுக்கொண்டனர். ஆனல் வந்த காலத் தை நழுவவிடாது அனைத்தையும் மறைத்து மதுரை நகரம் சென்றனர். குதிரை வரும் வரும்' என எதிர்நோக்கியிருந்த பாண்டிய மன்னன்முன் சென்ற அவர்கள் மணிவாசகர் அரசன் பொருளைக்கொண்டு கோயில் கட்டுவதாகக் கூறினர். அவர்கள் சொல்லு முன்பு மணிவாசகர் அருட்பணியின் புகழ் மக்கள் மூலமாகப் பாண்டியன் காதிலும் பட்டது. பாண்டியனும் சிறந்த சிவ பக்தன். அவனும் முன்னேரும் நாட்டில் எண்ணற்ற கோயில்கள் கட்டியுள்ளனர். எனினும் இவர் கட்டிய கோவில் பற்றியும் இவர் பற்றியும் உண்டான புகழ் அவன்பரம்பரை அறியாத ஒன்று. இன்றும் பெருந்துறை கோயில் கலைக்கு முதலிடம் வகுத்துள்ளதை யாவரும் அறிவர். எனவே, அவர் புகழ் கண்டு அரசனுக்கு வெறுப்பு உண்டா யிற்று. அமைச்சரும் அதற்கேற்றபடி மணிவாசகர் மன்னவன் பொருளைத் தவருன வழியில்-குதிரை வாங்காது கோயில் பணியில்-செலவிடுவதாகக் கூறினர். அவர் ஒலையும் பொரு ளும் தங்கள் வழி அனுப்பியதைக் கூறவில்லை. தன் பணத்தால் மற்ருெருவர் புகழ் பெறுவதா' என்ற எண்ணமும் பாண்டியன் மனத்தில் புகுந்தது. அந்த நிலையில் குதிரைகளே உடனே வாங்கி வரும்படி பாண்டியன் ஆட்களை அனுப்பி ன்ை. பெருந்துறையில் பெருங் கோயிற் பணியில் ஈடுபட் டிருந்த மணிவாசகர் மன்னவன் ஒலையைக் கண்டார். தம் முடனிருந்த துன்மந்திரியும் மற்றவரும் இடையில் இழைத்த குதுகளை ஒரளவு உணர்ந்து கொண்டார். என்ருலும், அவர் களைக் காட்டிக்கொடுக்க அவர் உள்ளம் இசையவில்லை. தம் மால் உயர்ந்த அவர்களைக் காட்டிக்கொடுத்து அவுர்களை