பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வழுவிலா மணிவாசகர் 'வழுவிலாதபேர் மாணிக்கவாசகன்' என ஞானப்பெயரைச் சூட்டினர். அன்று முதல் அவர் மாணிக்கவாசகராகவே வாழ்ந்து வருகிருர். வாதவூர் என்ற ஓர் ஊருக்கே உரிமை யாக இருந்தவரை, ஆண்டவன் உலகுக்கே உரிமையான வராக்கிவிட்டான். இவ்வாறு அருள்செய்த ஆண்டவன் உடன் மறைந்துவிட்டான். கண்ணிலான் பெற்றிழந்து விட்ட நிலையில் அழுது புரண்டார் மணிவாசகர். யானுனேத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே?’ என வினவினர். ஆண்டவன் விண்ணிலே தோன்றி, இவர் இன்னும் சின்னுள் தமிழ் நாட்டில் இனிய பாட்டிசைத்துப் பாண்டியனையும் அவனைச் சேர்ந்தோரையும் மக்களையும் திருத்த வேண்டியுள்ளமையின் இவரை விட்டுச் சென்ற காரணத்தை விளக்கினன்; இறைவன் திருவாக்கின் படியே பெருந்துறையின் எல்லையில் இருந்துகொண்டு தம் உழைப்பின் பலயை செல்வத்தைக் கொண்டு அரசனுக்கு கோயிலெடுக்கத் தொடங்கினர்; அவர் நினைத்த எண்ணம் கைகூடிற்று. ஆனல் அதே வேளையில் அவரை அறியாது பின் தொடர்ந்து வந்த துன்மந்திரி, அவன் துணைவர்தம் எண்ண மும் கைகூடக் காலம் வந்தது. ஆண்டவன் பணியிலே தம்மை முற்றும் அர்ப்பணித்த மணிவாசகர் அரசன் பணியினைச் செய்ய முடியாது என உணர்ந்தார். ஒருவர் இரு தலைவருக்குத் தொண்டராயிருத் தல் இயலாது என்பதை உணர்ந்தார். அதற்கேற்றபடி அங்கே அரேபிய நாட்டிலிருந்து குதிரைகளும் வரவில்லை. எனவே, அங்கே முன்னேற்பாட்டுடன் வந்திருந்த முன்னைய முதல் அமைச்சன் முன்னிலையில், அரச காரியங்கள் ஆற்றும் சிறந்த அதிகாரி ஒருவரிடம் அரசருடைய பொருளையெல் லாம் கொடுத்து, அப்படியே கொண்டுசென்று அரசரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். தம் அமைச்சர் பதவியையும் விடுதலைபெற விழைந்து ஒலை எழுதி 1. One servant cannot serve for two masters (Bible)