பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ்ர்லாறு 13 பாண்டிய மன்னனுடைய குதிரைக் கொட்டிலில் நல்ல குதிரைகள் இல்லை; அரேபிய நாட்டிலிருந்து தன் துறைமுக மாகிய பெருந்துறைக்கு நல்ல குதிரைகள் வருகின்றன எனக் கேள்விப்பட்டான். அக் குதிரைகளை வாங்கிவர யாரை அனுப்புவது என எண்ணினன் மன்னன். பெரும் பொருளைக் கண்டவரிடம் கொடுத்தனுப்ப விரும்பவில்லை. அவன் வாதவூரரை அழைத்துத் தன் நிதி அறையைத் திறந்து குதிரை வாங்கவேண்டும் பொருள்களைக் கொண்டு செல்லப் பணித்தான்; அத்துணை நம்பிக்கை அவனுக்கு அவரிடமிருந் தது. அவரும் அவ்வாறே எண்ணற்ற இருநிதியை எடுத்து, ஒட்டகங்களின் மேலேற்றித் தக்க காவலுடன் அனுப்பினர். பின் மன்னனிடம் விடைகொண்டு அங்கயற்கண்ணி அம்மை யுடன் இருக்கும் சொக்கேசர்முன் சென்று நின்ருர், தாம் அதுவரை ஊதியத்தால் முயன்று ஈட்டிய பொருளைக் கொண்டுவந்து இறைவன் முன் வைத்தார். 'ஒன்று வேண்டுமிப் பொருளெலாம் உனக்கும்ஐம் பொறியும் வென்று வேண்டுநின் அன்பர்க்கும் ஆக்குக, (வா. உ. ப. 24) என்று வேண்டினர். அப்போது அந்தணன், ஆண்டவன் அருட்பூதியை அளிக்க, அதுவே ஆண்டவன் அளித்த கட்டளையாகிய நன்னிமித்தம் என எண்ணினவராய்த் தம் பொருளுடன் பெருந்துறைக்குப் புறப்பட்டார். பெருந்துறையின் எல்லையில் ஆண்டவன் குருந்த மரத் தடியில் குருவாக வந்து அவரைத் தடுத்தாட் கொண்டான். அவரும் தானே வந்தெம்மைத் தலையளித் தாட்கொண் டருளும் அந்த அருட்குருவின் அடிகளை வணங்கி, அவனு டைய அருள்வலைப் பட்டவரானர். அருள் வலைப்படவும் உள்ளம் குழைந்தது-உதடு அசைந்தது-திருவாசகம் தோன்றிற்று. அவர் தம் பாடலைக் கேட்ட இறைவன்,