பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{3 ഖഗ്രീക്ക് மணிவாசகர் அல்லவரும் இருந்திருப்பர். ஒருவேளை அல்லாதார் தலைவன் தலைமை அமைச்சனகி, அரசனுக்குக் காரியஞ் செய்வாளுக இருந்திருப்பான். அந்த வேளையில் வாதவூரர்தம் அறிவும் புகழும் நாடு முழுதும் பரவின: அரசனுக்கும் எட்டின. அவரை நேரில் வரவழைத்து அவர் திறனை வியந்திருப்பான். அவர் பரம்பரையும் அமைச்சர் பரம்பரை. எனவே, அவரைத் தனக்கு அமைச்சராக்கிக் கொண்டான்;-சாதாரண அமைச் சராக அன்று-தலைமை அமைச்சராகவே அவரை அமர்த்தி விட்டான். அவரும், 'அண்ணலரி மருத்தனனுக் கடல்வாதவூ ரமைச்சர் கண்ணுமிரு கவசமும்போல் காரியஞ் செய்தொழுகுவார்' (வா. உ. ப. 8) ஆகி, அவன் காரியங்கள் அனைத்திலும் கருத்திருத்தி வந்தார். எனவே, அதுவரை தலைமையிடத்திருந்த அமைச் சனுக்கும் அவனுடைய துணையாட்களுக்கும் அவர்மீது பொருமை எழுந்தது. மன்னன் மட்டுமின்றி, அவர்தம் தொண்டினையும் தூய உள்ளத்தையும் தன்னலமற்ற தியாக வாழ்வையும் கண்டு, மக்களும் அவரைக் கொண்டாடிப் போற்றினர்கள். அவரோ ஒன்றையும் கவனியாது கடமை வழி ஒழுகி அரசனுக்கு உற்ற அமைச்சராக வாழ்ந்ததோடு, ஆண்டவனுக்கு அன்புத் தொண்டு செய்தும் அறவழி நின்றும் வாழ்ந்து வந்தார். அவரை எப்படியாவது தாழ்த்த வேண்டு மென்று முயன்ற துன்மந்திரிக்கும் அவன் துணைவருக்கும் வாய்ப்புக் கிடக்கவே இல்லை. இப்படியே ஆண்டுகள் பல கழிந்தன. வாதவூரர் தமக்கென ஒன்றையும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல், தாம் பெற்ற திங்கள் ஊதியத்தை அப்படியே சேர்த்து வைத்து, ஆண்டவன் பணிக்குப் பயன் படுத்தக் காலம் பார்த்திருந்தார். துன்மந்திரியும் அவன் துணைவரும் அவரைத் துாற்றுவதற்குக் காலம் பார்த்திருந் தனர். ஆம் இரண்டிற்கும் காலம் வந்துவிட்டது.