பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ ர ல | று பாண்டி நாட்டிலே உள்ளது வாதவூர். அந்த ஊரில் பரம்பரைாாக அமைச்சயாக இருந்த அமாத்திய குலம் ஒன்று வாழ்ந்து வந்தது. அக் குடும்பத்தில் பிறந்தார் மாணிக்கவாசகர். அவருக்கு அவருடைய தாய் தந்தையர் இட்ட பெயர் என்ன என்பது நமச்குத் தெரியாது. அவரைப் பற்றி எழுதியவர்களெல்லாம் அவரை ஊர்ப்பெயர் கொண்டே வாதவூரர் என அழைக்கின்றனர். இவ்வாறு பேரற்ற அவர் பல கலைகளைக் கற்று விளங்கினர். அவர்தம் பரம்பரைக்கு ஏற்ப அமைச்சர் தொழிலுக்கு ஏற்ற பல கல்ை களையும் கற்று வல்லவராக விளங்கியதுடன் வேறு பல கல்ை களையும் கற்றுச் சிறந்தார். அவற்றுடன் இறைவனிடம் நீங்காத பற்றுக்கொண்டு என்றும் அவனேப் போற்றிவணங்கி வந்தார். அவருடைய பெற்ருேர்களைப்பற்றி ஒன்றும் தெரிய வில்லை; ஒருவேளை இளமையிலேயே அவர்கள் மறைந்து விட்டிருக்கலாம். எனினும் தம் செல்வ வளத்தாலோ, அன்றி அறிவின் திறத்தாலோ மணிவாசகர் அல்லது வாத்வூரர் சிறந்து விளங்கினர். அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவன் அரி மருத்தனன். அவனுக்குப் பல அமைச்சர்கள் உடன் துணை யாக உற்றுழி உதவினர்கள். அவருள் பல நல்லவரும் பல வ.-2