பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hé ഖഗ്രിൽ ഥങ്ങിഖresi குற்றங் களைந்து குணமுற்று வாழ வழிகாட்டியாக அமைய வேண்டுமென்பதே அறிவுடையார் துணிபு. அந்த வகையில் இந்நாடகமும் இதில் வரும் பாத்திரங்களும் மக்கட் சமுதா யத்தின் வருங்கால நல்வாழ்வுக்கு வழிகோலிகளாக அமைய வேண்டும் என்பது என்.ஆசை. அதிகாரமும் ஆணவமும் பட்டமும் பதவியும் கொடுமைசெய்ய எவ்வளவுதான் சாதக மாக இருந்தாலும்-அவற்றின் துணையால் சிலர் மற்றவர் களுக்கு மனமறிந்த பொய்வழிக் கொடுமைகளைச் செய்தா லும், முடிவில் அக் கொடுமைகளும் அதிகாரமும் ஆணவமும் அழிய உண்மை தலைதுாக்கி நிற்கும் என்பதை உணர்த்து வதே மணிவாசகர் வரலாறு. அவ்வரலாறு இன்றும் என்றும் உலகில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியேயாகும். இவ்வுண் மையை ஓரளவு முயன்று காட்டியுள்ளேன். அறிஞர்களும் அன்பர்களும் ஏற்று, குறையிருப்பின் காட்டுவார்களாயின் அடுத்த பதிப்புக்களில் திருத்திக்கொள்ள முயல்வேன். இந்நூல் வெளிவரக் காரண்மாயிருந்த அனைவருக்கும் என் நன்றி உரித்தாகுக. இந்நூல் இம்முறையில் அமையவும் இம் முன்னுரை எழுதவும் இடமாயிருந்தது குற்ருல, மலைச் சாரலாகும். குற்ருலத் தமர்ந்துறையும் கூத்தா உன் குரை கழற்கே, கற்ருவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவ்னே என்று மன்னிவாசகர் கசிந்த மண்ணிலே இந்நூல் உருவான நிலை பொருத்தமாகுமென நம்புகிறேன். வாழ்க மணிவாசகர் புகழ் வளர்க அவர்தம் அறப்பணி! - குற்ருலம் ; 10-6- 1962 அ. மு. ப.