பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுர்ை - - - - 15 சிலர் இவற்றிலெல்லாம் ஆராய்ச்சியே கூடாது என்பர். ஆனல், சற்று நின்று நினைப்பார்களானல் இவ்வாராய்ச்சி மணிவாசகருக்கு வழிவழியாக் வந்த பழியைத் துடைக்கவே பயன்பட்டது என்பதை உணர்வார்கள். சைவ அடியவர்கள் உண்மையில் பற்றும் பக்தியும் உடையவர்களாயின் தன் சமயக் குரவர்கள் பழியுடையவர்களாக-அதுவும் செய்யாத பழியைச் சுமப்பவர்களாக-வாழ்வதை விரும்புவார்களா? இந்த வரலாறுதான் முடிந்த முடிபு என்று நான் கூற வில்லை. என் மனத்தில் பட்ட கருத்துக்களே இவ்வாறு உருப் பெற்றன. இதில் பிற்பகுதியில் வரும் சிற்சில நிகழ்ச்சிகள் இயற்கை நிலைக்கு மே ற் ப ட் ட ன (Supernatural) வாயினும், அவற்றை மாற்றின், சைவ அன்பர் மனம் நையு மென்ற காரணத்தால், அவற்றை அப்படியே அமைத்துக் கொண்டேன். மணிவாசகர் வரலாறு இவ்வாறுதான் அமைந்திருக்க வேண்டுமென்பதை முதலில் சுருக்கி எழுதிக் காட்டியுள்ளேன். இதில் மாற்றம் இருப்பின் நல்லவர் ஆய்ந்து சொன்னல், என்றும் தலைதாழ்த்தி ஏற்றுக்கொள் வேன். ஆராய்ச்சி அறிஞர்களையும் சமயத் தலைவர்களையும் இத்துறையில் கருத்திருத்தி ஆராய வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். கதை நாடகமாக அமையுங்கால் சில பாத்திரங்களைப் படைக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. பத்திரங்களின் வாயிலாகவே வரலாற்று உண்மைகள் பலவற்றை வெளியிட வேண்டும் என்பதே நாடக நியதி. அந்த அடிப்படையில் இந்நாடகத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் மணிவாசகர் வரலாற்று அடிப்படையில் அமைந்து அவ் வரலாற்றைத் தொடர்பு கெடாது அமைக்கும் வகைக்கு உதவுகின்றன. இப் பாத்திரப் படைப்புக்களின் வழியே இக்காலத்து இவ் வரலாற்றை ஒட்டிய பல நிகழ்ச்சிகளையும் ஒரளவு உணர்ந்து கொள்ள முடியும் என எண்ணுகின்றேன். வரலாருே கதையோ, நாடகமோ சென்ற நிகழ்ச்சிகளே நிகழ் காலத்தில் வாழும் மக்களுக்குக் காட்டி, எதிர் காலத்தில் அவர்கள்