பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 ೩gಖೆಐ॥ asflaresi அவர்தம் புகழ் அடிப்படையின் பொருமையால் உருவாயிற்று என்பது தெளிவாகும். எனவே அவர் வரலாறு எப்படி அமைந்திருக்கும் என என்னை எண்ணத் தூண்டிற்று. திருவாசகத்தைப் பலமுறை படித்து உணர்ந்து நிற்கின்ற நிலையிலே இத்தகைய அருளாளரும் தவறுவாரோ என்ற எண்ணம் என் உள்ளத்தில் உண்டாகி உறுத்திக்கொண்டே வந்தது. 'தன்னடியார் திறத்தகத்துத் தாமரையா ளாகிலும் சிதகு ரைக்குமேல் என்னடியார் அதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர் போலும்' -பெரியாழ்வார் (4, 9. 2) என்று ஆண்டவனே போற்றும் அடியவர் தவறுவார்களோ? சிற்சில சமயங்களில் என் உள்ளத்தில் பலப்பல புதுக் கருத்துக் கள் உருவாகும். இந்த நிலையிலும் அவர் வரலாற்றை ஒத்த மேலே கண்ட சில நிகழ்ச்சிகளை நேரில் காணும் வாய்ப்பிலும் பல நினைவு உண்டாயிற்று. எனவே, அவர் வரலாறு இந்த வகையில்தான் அமைந்திருக்கும் என முடிபிட்டு அவர் வரலாற்றை ஓரளவு குறித்தேன். அதை அப்படியே சைவர்கள்முன்-தமிழ் மக்கள்முன் வைக்க நினைத்தேன். மிகச் சுருக்கமாக அவ்வரலாற்றைத் தொகுத்தேன். பிறகு அதை நாடகமாக்கினல் நன்முக இருக்குமென்று சில நண்பர்கள் அறிவுறுத்திய காரணத்தாலே அவ்வரலாற்றை இந் நாடக நூலாகவே எழுதி முடித்தேன். இடையிடையே அவர்தம் தித்திக்கும் மணிவார்த்தை'களையே பாடல்களாக அமைத்துள்ளேன். முன்னேர் மொழி பொருளே யன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுதல் மரபல்லவா? நான் கருதிய வரலாற்றையும் சுருக்கமாக உடன் எழுதி யுள்ளேன். இந்த அமைப்பு புதியது. சில சைவ அன்பர்கள், அடியவர் வரலாற்றை இப்படி மாற்றலாமா என்று வாதிடுவர்; چ