பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுர்ை - {3. தான். அந்தத் தவறு செய்தவர் பாடல்கள் இப்படிக் காலம் கடந்து-நாடு கடந்து-ஏன்?-சமயமும் கடந்து வாழும் என்று யாரே சொல்லவல்லார்? வேறு பொருள் பற்றிய பாடல்களாயினும் ஒருவாறு சிலகாலம் வாழலாம் என்பர். ஆல்ை, சமய அடிப்படைப் பாடல்கள் உளத் தூய்மையும் செயற்றுய்மையும் இல்லாதவர் பாடினல் நிச்சயம் அவை காலத்தை வென்று வாழமாட்டா இன்று மட்டுமல்லாது எக்காலத்திலும் வாழும் வகையில்-தமிழ் அழிந்தாலும் வேற்று மொழியில் வாழும் வகையில்-மணிவாசகர் திரு வாசகம் அமைந்துவிட்ட ஒன்றே அவர் தவறு செய்யாதவர் என்பதை நன்கு எடுத்துக் காட்டுகின்றதன்ருே? இறைவனே அவரை வழுவில்ாதபேர் மாணிக்கவாசகன்' என அழைத்த மையாலும் அவர் குற்றமற்றவர் என்பது தெளிவுறுமன்ருே? இந்த அடிப்படைகளின்படியும், முன் அரசன், அமைச்சர் ஆகியோர் மனநிலை அடிப்படைகளின்படியும் ஆராய்ந்தால் மணிவாசகர் வரலாறு வேறு வகையில்தான் இருந்திருக்க வேண்டும் என்பது ஒருதலை. இதை அறிவுடையார் ஏற்பர் என்பதில் ஐயமில்லை. ஆல்ை, எப்படி இருந்திருக்கும் என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். எனினும் நல்லவர்கள் ஒன்று சேர்ந்து ஆராய்வார்களாயின் உண்மை புலனாகாமற் போகாது. தம் புகழ் கண்ட காரணத்தினலேயே மன்னனும் பிற மந்தரிகளும் தம்மீது பழி சுமத்துகிருர்கள் என்பதை நன்கு உணர்ந்தவராகிய மணிவாசகர், தமக்குப் புகழ் வேண்டாம் என்பதை வெளிப்படையாகவே ஆண்டவன்முன் வேண்டு கோளாக ன்வக்கின்ருர். 'உற்ருரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர் வேண்டேன்' என்றும், வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம்' என்றும் பாடித் தம் கருத்தை உலகுக்கு உணர்த்து கின்ருர். இந்த உண்மையினைச் சங்ககால முதற்கொண்டு இன்றுவரை அடியவர் பலரும் காட்டிக்கொண்டுதான் வரு கின்றர்கள். எனவே, மணிவாசகர் தம் புராண வரலாறே