பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு 23 கொடுமையைத் தம்மேல் ஏற்றித் தம் குடும்பங்களுக்குத் தொல்லையும் பழியும் உண்டாக்கி விட்டாரே என்று வருந்தி அவரைப் பழித்துரைத்தனர். (வஞ்சகர் செயல் மெள்ள நாட்டில் பரவத் தொடங்கியிருக்கலாம்.) மணிவாசகரோ அவற்றிற் கெல்லாம் அஞ்சாது, 'சுற்றமும் தொடர்பும் நீத்தேம் துன்பமும் இன்பு மற்றேம் வெற்றுடல் மானந் தீர்ந்தேம் வெறுக்கைமேல் வெறுக்கை வைத்தேம் செற்றமும் செருக்கும் சாய்ந்தேம் தீவினை இரண்டுந் தீர்ந்தேம் கறறைவார் சடையான் கோலங் காட்டியாட் கொண்ட வன்றே! (வா. உ. பட. 83) என்று கூறி, எல்லாம் அவன் செயலே என்று, இன்ருே ரிடையூறு எனக்குண்டோ என்ற உணர்வில் ஆண்டவனைப் போற்றி இருந்தார். தம் அமைச்சுத் தொழிலுக்கு முறை யாக அவர் வராத நிலையைப் பாண்டியன் கவனித்ததாகத் தெரியவில்லை. குதிரை வரக் காலம் தாழ்க்கவே, துன்மந்திரியின் போதனையால் தூண்டப்பட்ட பாண்டியன், மணிவாசகர். தூய்மையை ஒரளவு உணர்ந்திருந்தபோதிலும், ஒரு நாள் கொடுமைக்கு உட்படுத்தினன். அவரோ, எதற்கும் கவலை யுருது ஆண்டவனயே நோக்கி நின்ருர். நன்றிதே தன் அடிமை என்று தம் தலைவனகிய ஆண்டவனை முன்னிறுத்தி வேண்டினர். என்ன விடுதி கண்டாய்? எனக் கேட்டார். 'தாரகை போலும் தலைத்தலே மாலைத் தழலாரப்பூண் வீரஎன் றன்ன விடுதிகண் டாய், விடின் என்னை மிக்கார்