பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வழுவிலா மணிவாசகர் ஆரடியா னென்னின் உத்தர கோசமங் கைக்கரசின் சீரடியார் அடியான் என்று நின்னைச் சிரிப்பிப் பனே' (c. வி. 48) என்று எல்லாப் பாரத்தையும் ஆண்டவன் மேலேற்றி அமைதி யாக இருந்தார். மறுநாள் இறைவன் காட்டிலுள்ள நரிகளை யெல்லாம் அழகிய-அதுவரையில் யாரும் கண்டிராதபடிசிறந்த குதிரைகளாகக் கொண்டுவந்து கொடுத்து மறைந் தான். அவற்றைக் கண்ட மன்னன் மணிவாசகரை அழைத்து மன்னிப்புக் கேட்டுச் சிறப்பும் செய்தான். ஆனால், அவற்றையெல்லாம் கண்டு களிப்பெலாம் மிகக் கலங்கு கின்றேன்' எனக் கலங்கிற்று அவர் உள்ளம். அவர் உள்ளம் மட்டுமா? துன்மந்திரி, அவரைச் சேர்ந்தவர்தம் உள்ளமும் கலங்கிற்று. இரு கலக்கங்களுக்கும் அடிப்படையும் நிலையும் வேருகும். எப்படிக் குதிரைகள் வந்தன? இனி நம் நிலை என்னுகுமோ என்று அக் கொடியவர் அஞ்சினர். இந்த இன்ப நிலைக்குப்பின் ஆண்டவன் அடி எத்தகையதோ' என மணிவாசகர் உள்ளம் சென்றது. எப்படியோ வந்த பெருங் குதிரைகளைக் கண்டு மகிழ்ந்த பாண்டிய மன்னன் அவரைப் பாராட்டினன். ஆனல் அப்பாராட்டு ஒரு நாள் அளவினதே! அன்று இரவே ஆண்டவன் அருளால் பரிகள் நரிகளாகி, உள்ள குதிரைகளையும் கடித்து ஊரையும் பாழாக்கிக் காட்டுக் குள் ஒடிவிட்டன. மன்னவன் மருண்டான். அவள் உள்ளம் ஒரு வேளை ஆண்டவன் அருள் விளையாடல்களையும் மெய்யன் பர்தம் உண்மை நிலையையும் உணர்த்தியிருக்கும். அதற்குள் துன்மந்திரியின் போதனையான இருள் அதை மறைத்து, மாணிக்கவாசருக்குக் கொடுமை இழைக்கத் தூண்டியிருக் கும். எனவே அப்போதே மாணிக்கவாசகரைப் பிடித்துக் கொடுமை செய்ய ஆணையிட்டான், கோடை வெய்யிலில் வையையாற்று மணலில் மணிமொழியார் துன்புறுத்தப் பட்டார். அவரோ, -