பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு 25 "நாதவோ நாத முடிவிறந்த நாடகஞ்செய் பாதவோ பாதகளும் என்னைப் பணிகொண்ட வேதவோ வேதமுடிவின் விளைந்ததனிப் - போதவோ போத நெறிகடந்த பூரணவோ' (ப. ந. படலம், 48) என்று எண்ணித் துதித்து, எதற்கும் அஞ்சாது அவனடி நினைத்து நின்ருர். மதுரைமா நகரில் பல நல்லவர்களும் வாழ்ந்திருந்தனர். அவருள் வந்தி என்னும் பிட்டு விற்றுண்ணும் கிழவியும் ஒருத்தி. எளிய வாழ்வில் நின்ற அவள் இறைவனை இடை யருது எண்ணி, அவனடி அடையக் காலம் நோக்கி இருந் தாள். அவள் வேண்டுகோள் நிறைவேறும் காலம் வந்தது: அத்துடன் மணிவாசகர்தம் உண்மைத் தொண்டு உலகம் உணர்ந்து கொள்ளத்தக்க காலமும், கொடியவர் தீச்செயல் வெளியாகும் காலமும் பாண்டியன் உண்மை உணரும் கால மும் ஒன்றின. வாராத காலத்தில் வையையில் வெள்ளம் பெருகிற்று; அணைக்கடங்காத வெள்ளம். புனல்யாறு அன்றிது பூம்புனல் யாறு' என்று போற்றப்பட்டு அழகு நடை நடந்து செல்லும் வையையாறு பொங்கிற்று. குழலும் யாழும் அமுதும் குழைத்த மங்கையின் மொழி மதுரையில் வெடிச் சொற்களாக மாற்வில்லையா? சீற்றம் கொண்ட வையை வெள்ளத்தை எளிமையில் தடுக்க முடியவில்லை. வெள்ளம் கண்ட மன்னன் மனம் பதைத்தது; தான் மணிவாசகருக்குத் தவறு இழைத்த கொடுமைக்கே அது தண்டனை என அவனுக்கு உணர்த்திற்று. அதை வெளிக் காட்டிக் கொள்ளவும் இயலவில்லை; மறைக்கவும் முடிய வில்லை. அதைப் பரஞ்சோதியார் மெல்லப் பாடுகிரு.ர்.