பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு 27 ஊனக்கண் கொண்டும் காண உடன்விளை யாடல் செய்வார் (ம. சு. பட. 38) இவ்வாறு விளையாடிய இறைவன் பங்கு அடைபெற வில்லை. அவனே அரசன்தன் ஆட்களிடம் வலியச் சென்று தன்னை வந்தியாளாகக் குறித்துக் கொள்ளச் சொன்னன். எனவே, அவர்கள் வந்தியைக் கேட்க முடியவில்லை. அவனையே-வேலை செய்யாத தன்மையைக் கண்டுபிடித்தனர். அவனே ஒருவருக்கும் அஞ்சவில்லை. அவனுடைய அமைச் சரும் பிறரும் அவன் உருவம்கண்டு ஏனே அருகில் செல்லவும். தண்டிக்கவும் அஞ்சினர். எனவே, அரசனிடம் சென்று அனைத்தையும் கூறி முறையிட்டனர். அரசன் அணையைக் சாணவந்த நிலையிலே அந்தப் பங்குள்ள இடத்துக்கு வந்தான். இறைவன் தலையில் மண்ணைக் கூடையில் வைத்து நின்றுகொண்டிருந்தான். அவனை அணுகித் தன் பிரம்பில்ை மன்னவன் அடித்தான். அவனுக்கு அடிபட்டது என்று யார் சொல்ல முடியும்? அவன் முடியிலிருந்த மண் ஆற்றில் விழுந் தது; வெள்ளம் வற்றிவிட்டது; அவனையும் காணவில்லை. ஆனல், அனைவரும் மகிழ்வதற்குப் பதிலாக அஞ்சினர். ஏன்? பாண்டியன் அடித்த அடி படாத இடம் இல்லையே! "பாண்டியன் முதுகில் பட்டது செழியன் பன்னியர் உடம்பினிற் பட்ட (து) ஆண்டகை அமைச்சர் மேனியில் பட்ட தரசிளங் குமரர் மேற்பட்ட(து) ஈண்டிய கழற்கால் வீரர் மேற்பட்ட திவுளிமேற் பட்டது பருமம் பூண்டவெங் கரிமேல் பட்ட தெவ்வுயிர்க்கும் போதன்மேல் பட்ட தத்தழும்பு' ஆம்! அப் பரசிவமாகிய ஒப்பற்ற இறைவனை நோக்கி அடித்த அடி, உலகில் அனைவர் மேலும் பட்டது; பாண்டியன் மேலும் அவன் மனைவியர்மேலும் மட்டுமா? அவன் ஒரே