பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வழுவிலாமணிவாசகர் குமரன் மேல் பலமாகப் பட்டுவிட்டது. அவன் மாண்டான். பாண்டியன் ஆட்சி எல்லையும் சுருங்கிற்று. அவன் அமைச்சர் மேல் பட்டுவிட்டது. அந்த அடி தாளாது ஆண்டவனயே பழித்தும் இழித்தும் கூறிய அந்தத் துன்மந்திரியின் மனைவி துடிதுடித்து மாண்டாள். அவன் துணையாக இருந்த மற்ற வனுடைய தாயோ நெடுந்தொலைவில் இருந்தபோதிலும் அந்த அடிப்பட்ட அதிர்ச்சியிலே, இந்த அடிக்கு, ஆண்டவன் அடிபெறுவதற்குக் காரணமானவருள் தன் மகனும் ஒருவன் என்பதற்காக அவனைக் காண விரும்பாது, தன் உடலையும் அவனுக்குக் காட்ட விரும்பாது, அப்படியே நைந்து மறைந் தார். இப்படிக் கொடுமைகளெல்லாம் கேட்ட பிறகு அவர் தம் கண்கள் திறக்கப்பெற்றன. துன்மந்திரியும் மற்றவனும் பாண்டிமன்னனிடம் தங்கள் செயல்களையெல்லாம் கூறிப் பாண்டியன் பொருளையும் தந்துவிட்டனர். பாண்டி யன் கண் திறக்கப்பெற்ருன். மாணிக்கவாசகர் ஒன்றைப்பற்றியும் கவலைகொள்ளாத வராய்ச் சொக்கேசர் கோயில் சென்று அவரை வழிபட்டுக் கொண்டிருந்தார். பாண்டியன் அங்கே தேடிச் சென்று அவரடி வீழ்ந்து பணிந்து எழுந்தான். 'தொல்லை நீருலக மாண்டு சுடுதுயர் நரகத் தாழ வல்ல வென்னறிவுக் கேற்ற வண்ணமே செய்தேன்; நீரென் எல்லையில் தவப்பே முய்வந் திகபர ஏதுவாகி அல்லல் வெம்பிறவி நோய்க்கு அருமருந் தானி ரையா (ம. சு. பட. 68) என்று வேண்டி தொடர்ந்து அவரை வந்து நாட்டை ஆளும் துறையில் உதவ வேண்டினன். மாணிக்கவாசகர் புன்னகை புரிந்தார். மேலும், கோபமோ கவலையோ அவர் முகத்தில் இல்லை. அவர் பாண்டியன நோக்கி, யாவும் இறைவன்