பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு. 2. żś செயலே என்பதை உணர்த்தினர். மேலும் தாம் முன்னமே அந்த அரச பதவிகளையெல்லாம் உதறிய தன்மையினே விளக்கி, மேலும் ஆண்டவன் பணி செய்ய ஊர்தொறும் புறப்பட்ட நெறியையும் குறித்தார். அரசனும் அறிவு வரப் பெற்ற துன்மந்திரிகளும் பிறரும் எவ்வளவு வேண்டியும் அவர்தம் குறிவழியே ஆண்டவனைக் கோயில்தொறும் கும்பிடப் புறப்பட்டுவிட்டார். ஆம்! தமிழ்நாடும் சைவ உலகமும் என்றும் நிலைப்பெற்று வாழ வழியும் புலப்பட்டது. தமிழ் நாட்டுத் தலங்கள்தோறும் மணிவாசகர் சென்று இறைவனைக் கண்டு பாடினர். வழியிடை அவர் பெற்ற அனுபவங்கள் பல. பிற சமயத்தவரையெல்லாம் கண்டு வாதில் வென்றர். தில்லையின் எல்லேயில் சென்றதும் ஆண்டவன் கோயிலை எண்ணி எண்ணி உருகினர். அந்தணர் வழிகாட்ட அவருடன் சென்று அம்பலத்தரசைக் கண்ணுரக் கண்டு களித்தார். அங்கே ஆண்டவன் அருளால் புத்தரை வாதில் வென்ருர் போலும். தமிழ் நாட்டு எல்லாத் தலங் களையும் அவர் வழிபட்டார். எல்லாவிடத்திற்கும் இடை பருது சென்று இறைவனை வழிபட்டுப் பண் ஒன்றப் பாட்டி சைத்தார். அவற்றையெல்லாம் யாரே எழுதி வைப்பார்? இறைவனே அவர் பாடல்களையெல்லாம் சொல்ல எழுதித் தன் வாயிற்படியிலே வைத்து மறைந்தான். அவர் தம் வாசகத்துக்குத் தானே பொருள் (வாக்கியம்) என்ப தைச் சுட்டிக் காட்டினன். அவர் பெருமையை வையம் உள்ளளவும் வாழ வைத்தான். அவரை உலகில் உயர்ந்தவ ராக்கினன். புகழ் வேண்டாது மூலையிலிருந்தவரை உலகம் உள்ளளவும் புகழுமாறு செய்து, அவரது புகழுடம்பை, உலகம் உள்ளளவும் வாழவிட்டுப் பூதவுடம்பை நீக்கினன். மணிவாசகர் தில்லையில் இறைவனெடு இரண்டறக் கலந்தார். இன்றும் மக்கள் வாழ வழிகாட்டிகளாக அவர் தம் பாடல்கள் விளங்குகின்றனவன்ருே