பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுவிலா மணிவாசகர் அங்கம்-1 காட்சி-1 மாணிக்கவாசகர் :-(தனிமொழி) அ தே ா தூரத்தே தெரிகிறதே, அதுதான் திருப்பெருந்துறை போலும்! ஆம்! அதோ கலங்கரை விளக்கமும் தெரி கின்றதலல்வா! நெடும்பயணம் தீர்ந்துவிட்டது. இனிமேல் நம் கடமையைச் செய்ய வேண்டியது தான். ஆ! என்ன? என் உள்ளத்தில் ஏதோ தடு மாற்றம் நீங்கிய தெளிவு உண்டாகின்றதே. உள்ளொளி பெருகுகின்றதே. உடற்பாரம் குறை கின்ற மாதிரியல்லவா இருக்கிறது? என்ன இது! ஏதோ அற்புத சக்தியால்-அதிசய சக்தியால் இழுத் துக் கொள்ளப்படுகின்றேனே. பாண்டி நாட்டு இறைவ! பாண்டி வெள்ளமே! ஒன்றும் புரிய வில்லையே. என் கால்கள் எங்கே என்னை ஈர்த்துச் செல்லுகின்றன? அதோ பெருந்துறைக்குச் செல் லும் நெடுஞ்சாலை போகின்றதே. நான் எங்கே செல்கிறேன்! என்ன அது தூரத்தே பேரொளி தோன்று கின்றதே! நான் என்பதே எனக்குத் தெரிய வில்லையே? மத்தோன்மத்தகை வன்ருே நான் ஒடு கிறேன் (ஒடுகின்ருர்). அதோ! அதோ! அங்கே! என்ன? அரஹர முழக்கமல்லவா கேட்கின்றது!