பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3% வழுவிலாமணிவாசகர் அடியவர் பலர் கூடியிருக்கிருர்களே! அவர்கள் இடையில் பேரொளிப் பிழம்பாய்க் காட்சிதரும். அந்த ஞான குரு யார்? எங்கோ பார்த்தவராகத் தெரிகிருரே! எங்கே கண்டேன்! என்ன ஒன்றும் புரியவில்லையே. (விரைந்து ஒடுகிருர்). (தூரத்தே இறைவன் ஞானசிரியராகப் பல அடியவர்கள் கூடிப் புடைசூழ வீற்றிருக்கின்ருர்). அதோ! அதோ! என் ஞானசிரியர். (ஒடிக் காலில் வீழ்கின்ருர்). ஞாசிைரியர் :-அப்பனே! எழுந்திரு இதோ உன் இடர்கள் நீங்கின! பாசம் அகன்றது-பந்தம் கழன்றது. இனி நீ உரிமைப் பறவையாகப் பறப்பாய். உன் இச்சைப்படி அறப்பணி செய்வாய். ஊர்தோறும் செல்வாய். உன்னல் உலகம் நல்ல மணிமொழியைப் பெறப் போகின்றது. மாணி :-அருட்கடலே! தங்கள் முகங்கண்ட உடனே நான் என்னை இழந்தேனே. நான் வந்த வேலையினையும் மறந்தேன். உங்கள் பேரொளி என்னைப் பற்றி இங்கே கொண்டுவந்து சேர்த்தது. தாங்கள் யாரோ? அறியக் கூடவில்லையே! - ஞான :-அன்பனே! இன்னும் அறியவில்லையா! உனக்கு உபதேசம் செய்ய அல்லவா நாம் இங்கே வந்திருக் கின்ருேம். அருகே வா. (அருகே செல்லத் தலையில் கை வைத்து அவருக்குத் தீட்சை செய்கிருர்). - மாணி :-(தெளிவு பெற்றவராய்) அறிந்தேன்! அறிந்தேன்! உணர்ந்தேன்! தேவாதி தேவா பொய்யாய நெறியில் புகாமே என்னைப் புகுந்தாண்டு கொண்ட புண்ணியா! உன் அருள் திறத்தை என்னென்று பாடுவேன்? ஈன்ற தாயினும் பெரிதான நிலையில் என்னைத் தானே வந்து தலையளித்து ஆட்கொண்ட தயை நிறைந்தவனே! ஆகா! உன் அருள் நோக்கால் என் ஊருைம் உடல் வாழ்க்கை