பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- یis1-اسف, ar33 1- تا வெறுக்கத் தக்கதாகிவிட்டதே! என் ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தம! இனி உன்னை விடேன்! விடேன்! விடேன்! (பாடுகிருர்) . - ஞான : அன்பனே! உன் ஒருமைப்பாடு உணர்ந்தோம். இனி நீ எதற்கும் கவலைப்படத் தேவையில்லை; அஞ்ச வேண்டு வதும் இல்லை. உன் வாயிற் புறப்பட்டு உள்ளம் உருக்கும் சொற்கள்தாம் எத்துணை இன்பம் பயக்கின்றன நம் செவிக்கு! இத்தனை இனிமையாக நம் தமிழில் பாடியவர் இதுவரையில் யாரும் இல்லையல்லவா! எல்லாரும் ஆம் ஆம் இனிமை இனிமை தமிழ் தமிழ் தமிழ்! - ஞான : பாத்தாயா, எல்லாரும் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளுகின்றனர். ஆம்! உன் பாடல் இனிக்கிறது. உன் பாடலைக் கேட்கப் பேறுபெற்ற அனைவரும்-ஏன்? அனைத்துப் பொருளும்-விலங்குகளும் பறவைகளும் பிறவும் முத்தி அடைதல் உறுதி, அன்பனே! மாணி : என்ன ஆட்கொண்ட வள்ளலே! அதிகமாகப் புகழ்ந்து என்னைக் கர்வம்கொள்ளச் செய்துவிடாதீர்கள். தங்கள் அருள்நோக்கின் பயனே நான் பாடும் பாடல்கள். உங்கள் உள்ளக் கருணையே என் உணர்வுக் களஞ்சியம். எனக்கென இனி என்ன இருக்கிறது? நன்றும் தீதும் உன்பாலன அல்லவோ! ஆண்டவா! என்னையும் உன் அடியவர் தொகை நடுவுள் ஒருவளுக்கிக்கொண்டு அருள் புரிய வேண்டுகின்றேன். (வீழ்ந்து வணங்குகிரு.ர்.) ஞான நல்ல அன்ப உன் அன்பை உணர்ந்தோம் எனினும் நீ உலகில் உன் இனிய பாடலைப் பாடி இன்னும் சிலநாள் இருந்து, பக்திநெறியை வளர்க்கவேண்டும். இத்தகைய இனிய சொற்களைப் பாவாக்கி வாரிவழங்கும் உன் பெயர் இனி மாணிக்கவாசகன்’ எனவே வழங்கப் பெறும். 61.-3