பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வழுவிலா மணிவாசகர் அனை : வாழ்க மாணிக்கவாசகர்! வாழ்க மாணிக்கவாசகர்! வளர்க அவர் புகழ்! மாணி ஆண்டவனே! இந்தப் பேறு சிறந்ததே! எனினும் என்னையும் உங்கள் அடியவருள் ஒருவளுக்கி, உங்கள் அடி நிழலுக்கு ஆளாக்கிக்கொள்ள வேண்டும். ஆம்! என் விழைவு இதுவே. என்னை விட்டுவிடாதீர்கள்... 'இருந்தென்னை யாண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னி னல்லால் விருந்தின னேனை விடுதிகண் டாய்! மிக்க நஞ்சமுதா அருந்தின னேமன்னு முத்தர கோசமங் கைக்கரசே மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு மடங்கினர்க்கே.' ஞான : மாணிக்கவாசக! உனக்கு உலகில் இன்னும் சில பணிகள் உள்ளன. உலகம் உய்ய நீ பல ஞானனந்தப் பாடல்களை உன் திக்திக்கும் மணிவார்த்தைகளால் பாட வேண்டும். உலகில் உன் பாடல்களால் பக்தி வெள்ளம் பரவவேண்டும். தன்னை ஒப்பாரும் மிக்காரும் யாரு மில்லை என்று தருக்கி, உலகுக்குக் கொடுகைகள் செய்யும் பாண்டியனும், அவன் அமைச்சரும் பிறரும் உன் செயலால் செருக்கடங்கவேண்டும். அதன் வழி உலகம் உய்யவேண்டும். மாற்றுச் சமயங்கள் வேற்றுச் செயல் களால் நாட்டில் இழைக்கும் கொடுமைகள் உலகில் நீங்கவேண்டும். ஆகவே, அத்தனையும் உன் செயலாலும் சொல்லாலும் நிகழ இருக்க, நான் உன்னை உடன் அழைத்துச் செல்லல் பொருந்துவதாகுமா? மாணி : வலிய ஆட்கொண்ட வள்ளால்! என்னைக் கைவிட்டு விடுவையோ! வேண்டாம்! 1. புதிதாக அங்கே வந்தவன்,