பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 . 1-காட்சி ,1-فisہی ஆம் ஆண்டவனே! உன்னைக் கண்ட நெறியிலே மற்ருேர் பற்றிங் கறியேன் நாயேன். எனது இடரைக் களைந்தாய்: இன்பம் தந்தாய்! இனி என்னை விட்டுவிட்டால் என்ன செய்வேன்? என்னையும் உன்னுடன் கொண்டு செல்வாய் (ஒடித் தழுவ விரைகின்றர். உடனே குருந்தமரம்-குரு-சீடர் அனைவரும் மறைகின்றனர்ஒலமிட்டு அழைக்கின்ருர்.)ஆ! ஞானசிரியனுக வந்தவன் சோமசுந்தரக் கடவுளேயோ! அந்தோ அறியாதே கெட்டேன், ‘என்னுல் அறியாப் பதந்தந்தாய் யான தறியாதே கெட்டேன் உன்ன லொன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன் பன்ன ளுன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா தென்ன யகமே பிற்பட்டங் - கிருந்தேன் நோய்க்கு விருந்தாயே" வான்.ஒலி : அன்பே மாணிக்க வாசக! வருந்தாதே. உன்னல் நாடு உய்ய வழி இருக்கிறது. அதனுல்தான் உன்னை விட்டு வந்தேன்! தனியாக விட்டதாக எண்ணிக் கவலை கொள்ள வேண்டாம். நான் என்றும் தோன்ருத் துணையாய் உன்னுடனேயே இருப்பேன். உன் தொண்டினை மேற்கொள்! உனக்கு இடர் ஒன்றும் வாராது! வந்தால் நீ அழைக்காமலேயே நானே வந்து காப்பேன்! இது உறுதி! மணி : அண்ணலே! அதுவோ உன் பணி! அப்படியே செய்வேன். இதோ இப்போதே அனைத்தையும் துறந்தேன். இரசன் பொருளையும் அனுப்பிவிட்டு, எனது பொருளாக இருக்கும் இதுவரை சேர்த்து வைத்த அந்தச் சேமிப்பால் உனக்குக் கோயிலமைப்பேன்! -