பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்- காட்சி-2 (பெருஞ்சாத்தன், பழனிக் கொற்றன். வஞ்சுளம் ஆகியோர்.) பெருஞ்சாத்தன் : என்ன கொற்றரே! பாவம் ஏன் இப்படி ஏக்கம் பிடித்தவர்போல வருகின்றீர்? வாட்டம் உம்மிடம் குடிகொண்டு விட்டதோ? பழகிக் கொற்றன் : என்ன ஐயா அளக்கிறீர்! என்ன? குடி முழுகிவிட்டதா என்ன? எனக்கு உள்ள வரும்படி வந்து கொண்டுதான் இருக்கிறது. எனக்கெது பற்றியும் கவலை யில்லை. நான் மட்டுமா சம்பாதிக்கிறேன்? உன்னைப் போல் நிலைகெட்டா கிடக்கிறேன்? பெருஞ்: அப்படி என்ருல்...... பழகி : என் மனைவி எத்தனையோ வகைகளில் சம்பாதிக்கிருள். வயது சென்ற என் தாயர்கூட அல்லவா ஊரில் தனியாக இருந்து கொண்டு, மற்றவர்களுக்கு உதவி செய்வதாக என் பெயரைச் சொல்லிக்கொண்டே ஆயிரமாயிரமாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிருர், நீயோ பாவம் முன் இருந்த பட்டம் பதவியெல்லாம். பறிபோன ஆத்திரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிருய். பெருஞ் : ஆமாம்! ஆமாம்! உனக்கென்ன குறை! பழகி : ஏன்? உனக்கு மட்டும் என்னவாம்! உன் வைப்பாட்டி ஒருத்தி போதுமடா உன் வாழ்க்கைக்கு. பெருஞ் . ஒய்! அப்படிச் சொல்லாதேயும்.-என் மனைவி அவள். அவள் கேட்டிருந்தால் நீ இந்நேரம் என்ன கி யிருப்பாய் தெரியுமா?