பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1, காட்சி-2 37 பழகி : தெரியும்! தெரியும்-உங்கள் உறவு எனக்குத் தெரி யாதா? ஏதோ மாமா மகள், அத்தை மகள் போன்று தான் உங்கள் உறவு இல்லையா! அழகாக அந்தப் பரத் தையர் குலத்தில் வந்தவளைப் பாராட்டி மனைவி எனச் சொல்லுகிருயே-வெட்கமில்லை உனக்கு. அவள் உன் மனைவியா? பெருஞ் இல்லையா பின்னே? சரி, அது கிடக்கட்டும்; இப் போது நாம் இருவரும் சேர்ந்து ஒரு முக்கியமான காரியம் செய்யவேண்டி யிருக்கிறதே. பழகி : என்ன? என்ன அது? பெருஞ் : ஒன்றுமில்லை! அவசரப்பட வேண்டாம். நீ என்னைப் பற்றி என்ன சொன்னய்? நான் நிலைகெட்டவன் என்று தானே! ஏன் கெட்டேன் என்று உனக்குத் தெரியுமா? பழகி : ஏன்? இதுகூடவா தெரியாது. நாடறிந்த உண்மை யல்லவா அது அந்தப் பாவி எங்களுரான் வந்த பிறகு நீ நிலைகுலையாது எப்படி இருக்க முடியும்? அவன் அறிவும் திறமும் அத்தகையன. பெருஞ் : போதும் நிறுத்து! என்ன ஒரே அடியாகப் புகழத் தொடங்கிவிட்டாய். - பழகி : ஏன் அவனைப் புகழக் கூடாதா? பாவம், அவன்தானே என்னை ஊரிலிருந்து வலிய வரவழைத்து இந்த வேலையை வாங்கித் தந்தான். அவ்ன் இல்லையானல், நான் பாண்டி நாட்டு அமைச்சனுக முடியுமா? பெருஞ் : போடா முட்டாள்! அதையெல்லாம் இப்போது நினைத்துக் கொண்டிருக்கலாமா? அந்த நன்றி நின்ைப் பெல்லாம் யாருக்கடா வேண்டும்? நாய்களுக்கு அவை தேவை. மனிதராகிய நமக்கு ஏனடா? பழகி : அப்படிச் சொல்லாதே! எங்கேயோ மூலையில் கிடந்து ஊர் ஊராய்ச் சுற்றிவந்த என்னை, வலியு வரச்செய்து