பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வழுவிலா மணிவாசகர் இந்த வேலையை அவன் வாங்கித் தந்தான். மரியாதை யைக்கூட உன்னேடு சேர்ந்ததால் விட்டுவிட்டேன் என்கிறேனே. பெருஞ் : அதெல்லாம் கிடக்கட்டும். அவன் வரவால் நான் எவ்வளவு தாழ்ந்து விட்டேன் தெரியுமா? ஒன்றும் அறியாதவயிைனும் நான் அடித்தது ஆலங்காடாக" இருந்த இடத்திலே, அவன் புகுந்து ஏதேதோ செய்து மன்னவன் மனத்தையும் மாற்றியல்லவா விட்டான்? பழகி ஆம் ஓரளவு உணர்வேன். என்றலும் அவனுக்கு எதிராகப் புறப்படத் தயங்குகிறேன். பெருஞ் : தயக்கம் ஏன்? உடனே நாம் யோசித்து ஆவன செய்ய வேண்டாமா? அவன் இன்னும் ஏறினல் நம் வேலையையே தொலைத்து விடுவான். உடனே ஏதாவது செய்துதான் ஆகவேண்டும். அதோ என் வஞ்சுளமே வருகிருள். இந்த மாதிரிச் சூழ்ச்சிகளிலெல்லாம் அவள் மிக்க வல்லவள். பழகி : இருக்காதா? குலத்தளவே யாகும் குணம்! பெருஞ் : டே! அதெல்லாம் அவள் எதிரில் சொல்லாதே. ).வஞ்சுளம் வருகிருள்( ל வஞ்சுளம் : என்ன அத்தான்! இருவரும் அப்படிக் கோட்டை பிடிக்கிறமாதிரிப் பேசி கொண்டிருக்கிறீர்கள். பெருஞ் : ஆமாம் வஞ்சுளம். கோட்டையை-மந்திரியின் கோட்டையைப் பிடிக்கத்தான் திட்டம் போட்டிருக் கிருேம். வா! உன் உதவியும் தேவையாக உள்ளது. வஞ்சுளம் : என் உதவியா! நான் எப்போதும் தயார். என்ன செய்யவேண்டும்? உடனே சொல்லுங்கள். பழகி : அம்மா, கொஞ்சம் பொறுங்கள். பெருஞ் : பார்த்தாயா, இவன் அவனுக்காகப் பரிந்து பேசு கிருன்.