பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1, காட்சி-2 39 வஞ்சு : எவனுக்கு: என்ன சொல்கிறீர்கள்? பெருஞ் : தெரியவில்லையா வஞ்சுளம்? எல்லாம் அந்தத் தலைமை மந்திரி வாதவூரான் இருக்கிருனே! அவன் தான். . வஞ்சு : ஆமாம்! அந்தப் பாவி தொலைந்தால்தான் நமக்கு . வாழ்வு. பெருஞ்': உண்மை! அவனில்லாவிட்டால் நாம் இந்நேரம் எப்படி இந்த மதுரை நகரில் பவனி வ்ந்துகொண்டிருப் போம். பாவிப் பயல்! எங்கிருந்தோ வந்து நம்மையெல் லாம் கெடுத்துவிட்டானே! அவனை ஒழித்துக் கட்டுவதே நம் முதல் வேலை. அதற்காகவே நானும் பழநிக் கொற் றனும் கலந்து பேசிக்கொண்டிருக்கிருேம். வஞ்சு : நான் ஒருத்தி போய் அவனைச் சரிசெய்து என் வழிக்குக் கொண்டு வந்து விடுவேனே. நீங்கள் இதற் கெல்லாம் ஏன் இத்தன்ை பெரிய யோசனைகள் செய்து கொண்டிருக்கிறீர்கள்? பழகி. அதுதான் முடியாது. எங்களையெல்லாம் ஏமாற்றி விடுவதுபோல அவ்னிடம் முடியாதாக்கும். உங்கள் கைவரிசைகளெல்லாம் அவனிடம் செல்லாது. பர்வம் நம் அண்ணன்தான் உங்களிடம் மாட்டிக்கொண்டு விழிக்கிரு.ர். - வஞ்சு : என்ன சொன்னய்? என்னல் முடியாதா? பார் என் திறத்தை பெருஅ வஞ்சுளம்! அதெல்லாம் வேண்டாம். அவன் எல்லாவற்றையும் உண்மையிலேய்ே துறந்தவன்தான். ஆகவே அவனே, நீ மட்டுமல்ல-உன் தங்கை அந்த மேனகை வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அவன் வெற்றிக்கு அதுதானே முக்கியமான காரணம். இல்லா விட்டால் நீங்களெல்லாம் இருக்கும்போது, அவனை வெல்வது அரிதல்லவே! நான் சொல்வதைக் கேள்.