பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

புற வுரை சமயம் வளர்த்து அச் சமயத்தால் சமுதா யத்தை வாழவைத்த அடியவர் பலர். அந்த ஆக்கப் பணிக்கு அவ்வடியவர் செய்த தியாகச் செயல்கள் அளவற்றன. பழியுற்றும் தம்மையே பறிகொடுத்தும் மெய்ச் சமயநெறியையும் சமுதாயத்தையும் வாழ வைத்த அடியவர்களில் மணிவாசகர் தலையாயவர். செய்யாத பழியினைச் சிவன் செயலெனத் தம்மேல் ஏற்று, அவனருளாலே அனைத்தையும் வென்றவர் மணிவாசகர். அவர் வரலாற்றைமாற்றியும் பிறழ வைத்தும் வேறுபடுத்தியும் அவ்வக்காலச் சூழலுக்கு அமையக் கதையாக எழுதி வைத்தனர் சிலர். எனினும் சமயநெறி நின்றும் மெய்அருள் நோக்கியும் ஆராயின் உண்மை புலனுகும். இதன் விளக்கத்தை முன்னுரையில் காட்டியுள்ளேன். இறைவனரே 'வழுவிலாத பேர் மாணிக்கவாசகன்' என அழைத்த நல்ல பெருமைக்குரிய அடியவர் இவர். - இறைவன் அழைத்த பெயராலேயே 'வழுவிலா மணிவாசகர்' என அமைகின்றது இந்நூல். நாடக அமைப்பில் உள்ளமையின் சிற்சில புதுமைகளும் மாற்றங்களும் கொண்டுள்ளது. அவையெல்லாம் நாடகப் போக்குக்கென அமைந்ததாகக் கொண்டு காணின் அடியவர் வரலாறு நன்கு விளக்கமுறும். இது