பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடகமாக நடிக்கும் வகையிலேயே ஆக்கப் பெற்றுள்ள்து. இவ் வரலாறு என் எண்ணத்தெழுந்த ஒன்று. இதுவே முடிந்த முடிபென நான் வாதிட வரவில்லை. அறிஞர் இத்துறையில் ஆராய்ந்து மணிவாசகரை 'வழுவிலாதவராகவே ஆக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் என் நன்றி.

பணிவுள்ள அ. மு. பரமசிவானந்தம்

இறைவன் பேரிட்டாா பழுதிலாத சொல் மணியினைப் பத்திசெய் தன்பு முழுதுமாகிய வடத்திலை முறைதொடுத் தலங்கல் அழுது சாத்துமெய்யன்பர்க்கு அகமகிழ்ந் தையர் வழுவிலாத பேர் மாணிக்கவாசகன் என்ருர். (பரஞ்சோதியார்)