பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1920 கள் 30 களில் வாசகர்கள் "விழுந்து விழுந்து படித்த வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், ஜே. ஆர். ரங்கராஜ முதலியோரின் நாவல்களுக்கு காலப் போக்கில் வாசகர்களே இல்லாமல் போனார்கள்.

சரத் சந்திரர், காண்டேகர் நாவல்கள் ஒரு சீசனில் விரும்பி வாசிக்கப்பட்ட அளவுக்கு பின்னர் மிகப் பலரால் தேடி எடுத்து வாசிக்கப்படவில்லை.

மு. வரதராசன் எழுதிய நாவல்களுக்கு ஒரு கால கட்டத்தில் தான் மிகப் பரவலான செல்வாக்கு

இருந்தது.

1930 களில் தொடர்கதை எழுதத் தொடங்கிய கல்கியின் எழுத்துக்களுக்கு வாசகர்கள் குறையாமல் இருக்கிறார்கள். அவருடைய சரித்திர நாவல்கள், ஒரே பத்திரிகையில் திரும்பத் திரும்ப அச்சிடப்பட்ட போதிலும், அலுப்பில்லாமல் வாசித்து மகிழ்கிறவர்கள் எல்லாக் காலத்திலும் இருக்கிறார்கள் என்பது நிருபணமாகி உள்ளது.

அகிலன், நா. பார்த்தசராதி, ஜயகாந்தன் எழுத்துக்கள் ஒரு காலகட்டத்தில் மிக அதிகமான வாசகர்களால் வரவேற்கப்பட்டன. படித்து ரசித்துப் பாராட்டப்பட்டன. காலவேகத்தில் வாசகர்கள் அவற்றை குறை கூறவும், கவனிக்காதிருக்கவும் பழகிப் போனார்கள்.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 97