பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினமணி' இளமையும், வேகமும், புதுமையும் கொண்டு வளர்ந்தது. வாசகர்கள் மத்தியில் அதன் செல்வாக்கு பரவியது.

பாரத தேவி என்றொரு நாளிதழ் வந்து கொண்டிருந்தது.

இவை எல்லாம் தேசியப் பத்திரிகைகள் என்று பெயர் பெற்றிருந்தன. தேச விடுதலைக்காகப் பாடுபட்ட அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியை ஆதரித்த

பத்திரிகைகள் இவை.

பெரியார் ஈ. வெ. ரா. வின் கொள்கைகளையும் திராவிடர் கழகத்தையும் பிரசாரம் செய்யும் நாளிதழாக விடுதலை ப் பத்திரிகை நடந்து கொண்டிருந்தது.

ஆங்கிலம் படித்தவர்கள் 'ஹிண்டு பத்திரிகையை விரும்பி வாங்கினார்கள். ஹிேண்டு வாசிப்பது கவுரவத்தின் அடையாளம் - Status Symbol - storg கூட அநேகரால் கருதப்பட்டு வந்தது.

அந்நாளைய அரசியல் பிரிட்டிஷ் சர்க்கார் - பணி புரிந்தவர்களும், தேசீய இயக்கத்தை ஆதரிக்காதவர்களும் மெட்ராஸ் மெயில் என்ற ஆங்கில தினசரியைப் படிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும்

கொண்டிருந்தார்கள்.

தினமணி நிறுவனம் இண்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையை நடத்தத் தொடங்கிய பிறகு, அதை

இ வாசகர்களும் விமர்சகர்களும் 80